sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மறதி நோயால் அவதியா? கொஞ்சம் கவனமாக இருங்க...!

/

மறதி நோயால் அவதியா? கொஞ்சம் கவனமாக இருங்க...!

மறதி நோயால் அவதியா? கொஞ்சம் கவனமாக இருங்க...!

மறதி நோயால் அவதியா? கொஞ்சம் கவனமாக இருங்க...!


PUBLISHED ON : பிப் 09, 2014

Google News

PUBLISHED ON : பிப் 09, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இதயநோய், புற்றுநோய், பக்கவாத நோய்க்கு அடுத்ததாக, மறதி நோய், இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. முதுமையில் சுறுசுறுப்பு, புகைப்பதை கைவிடுதல், ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் சரியான வாழ்க்கை முறை ஆகியவை, மறதி நோயைத் தடுக்க உதவும்

1. மறதி நோய் (டிமென்ஷியா) என்றால் என்ன?

'டிமென்ஷியா' என்பது, லத்தீன் மொழியில் மறதி நோயைக் குறிக்கும். ஒருவரின் சிந்தனை, நினைவு மற்றும் புரிந்து கொள்ளும் தன்மை குறைந்து, அன்றாட வாழ்க்கை, மோசமான நிலையில் இருப்பது இதன் பொருள். மறதி நோய், படிப்படியாக வளரும்; தாக்கம் அதிகரிக்கும்போது, நிலை மோசமாகும். மறதி எவ்வளவு வேகமாக அதிகரிக்கும் என்பது, பாதிக்கப்பட்ட நபரைப் பொறுத்தது.

2. மறதி நோயின் அறிகுறிகள் என்ன?

நினைவு இழப்பு ஏற்படுதல், மன நிலை மாற்றங்கள், தொடர்பு பிரச்னைகள் இதன் அறிகுறிகள். உதாரணமாக, கடை தெருவிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழி மறந்து போதல், பெயர்கள், இடங்களை மறத்தல், முந்தைய நாளில் நடந்தது, நினைவில் இல்லாமல் போகும். மூளையில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பகுதிகள், நோயால் பாதிக்கப்படுவதால், மறதி உள்ளவர்கள், தங்களுக்கு ஏற்படும் நிலை அறிந்து, சோகம், பயம், கோபத்துடன் இருப்பர். பேசுதல், படித்தல், எழுதும் திறன் குறையும். மறதி நோயின் பிந்தைய கட்டங்களில், பாதிக்கப்பட்ட நபருக்கு, அன்றாட பணிகள் செய்வதில், பிரச்னைகள் ஏற்படும்; அவர் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும்.

3. இந்த நோயின் பாதிப்பு எவ்வாறு இருக்கும்?

இதய நோய், புற்றுநோய் மற்றும் பக்கவாத நோய்க்கு அடுத்தபடியாக, இறப்பிற்கு முக்கிய காரணமாக மறதிநோய் உள்ளது. உலக அளவில், 2.4 கோடி பேர், மறதி நோயால் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 46 லட்சம் புதிய நோயாளிகள் உருவாகின்றனர். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், 10 முதல் 37 சதவீத முதியோர், மறதி நோயால் அவதிப்படுகின்றனர். ஆண்டுக்கு, 4 லட்சம், புதிய நோயாளிகள் உருவாகின்றனர். தமிழகத்தில், இது, 3.5 சதவீதமாக உள்ளது. இது, 2020ல், இரண்டு மடங்காகும்.

4. மறதி நோயை குணப்படுத்த முடியுமா?

மருந்துகள், தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பெரும்பாலான வகை மறதி நோய்களை, குணப்படுத்த முடியாது. சில வகை மறதி நோயை, சில அறிகுறிகளை, தற்காலிகமாக குறைக்க மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

5. மறதி நோய் எதனால் ஏற்படுகிறது; அதில் வகைகள் உண்டா?

மறதி நோயில், அல்சைமர் நோய், ரத்த நாள நோய், பிரன்டோ-டெம்பொரல் வகைகள் உள்ளன. அல்சைமர் மறதி நோய்: மூளையின் வேதியியல் தன்மைகளும், அமைப்புக்களும் மாறி, மூளை செல்கள் இறப்பதால், அல்சைமர் ஏற்படுகிறது. ரத்த நாள மதி நோய்: மூளை, ஆக்சிஜனை தாங்கிய ரத்தத்தைப் பெற ஒரு நாள வலைப்பின்னலைச் சார்ந்திருக்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்வது நின்று விட்டால், மூளை செல்கள் அனேகமாக இறந்து விடும். இது ரத்தநாள மறதி நோய் (வாஸ்குலர் டிமன்ஷியா) அறிகுறிகள் ஏற்படலாம். பக்க வாதத்தை அடுத்து இந்த நோய் ஏற்படும். லெவி அமைப்புக்களைக் கொண்ட மறதி நோய்: இந்த வகை மறதி நோய் நரம்பு செல்களுக்குள் உருவாகும் மிகச்சிறிய உருண்டை வடிவ அமைப்புக்களின் பெயரைக் கொண்டிருக்கிறது.

அவை, மூளையில் இருப்பதால் மூளைத்திசு படிப்படியாக அழிகிறது. நினைவுத்திறன், கவனம் செலுத்துதல், மொழித்திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. ப்ரன்டோ - டெம்பொரல் மறதி நோய்: இந்த நோயில் மூளையின் முன்பக்கம் அதிகம் சேதமடைகிறது. முதலில் நினைவுத்திறனை விட ஆளுமையும், நடத்தையையும் பாதிக்கும்.

6. மறதி நோயை எப்படி கண்டறிவது?

பலரும் தங்களுக்கு மறதி நோய் இருப்பதாக பயப்படுகின்றனர். குறிப்பாக, தங்களின் நினைவுத்திறன் குறைந்து வருவதாக தோன்றினாலோ, மறதி அதிகரித்தாலோ மறதி நோய் இருப்பதாக கருதி விட முடியாது. அது மன அழுத்தம், மன சோர்வின் அறிகுறியாக இருக்கலாம். அரிதாக விட்டமின் பற்றாக்குறை, மூளைக்கட்டியாலும் மறதி நோய் அறிகுறிகள் ஏற்படும்.

உங்களைப்பற்றி அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவரைப்பற்றி கவலையாக இருந்தால், உங்கள் டாக்டரிடம் பேசுவது நல்லது. நோய் அறிதலை சரியாக செய்வது மிக முக்கியம். பொது மருத்துவர், முதியோர் சிறப்பு மருத்துவர், மூளை நரம்பியல் மருத்துவர், மன நல மருத்துவர்களால் நோய் கண்டறிய முடியும். இதற்காக, ஒருவரின் நினைவுத்திறன், அன்றாட பணிகள் செய்யும் திறனையும் அறியும் பரிசோதனைகள் உள்ளன.

7. மறதி நோயை தடுக்க முடியுமா?

மறதி நோயை விளைவிக்கும் பெரும்பாலான நோய்கள், எதனால் ஏற்படுகின்றன என்பது தற்போது நிச்சயமாக தெரியாது. எனவே, மறதிநோயை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று உறுதியாக தீர்மானிப்பது கடினம். இருந்தாலும், ஆரோக்கியமான உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் மறதி நோயை தடுக்க உதவும். குறிப்பாக புகை பிடிக்காமை, தவறாமல் உடற்பயிற்சி செய்தல், கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்தல், முதுமை வரை மனதை சுறுசுறுப்பாக வைத்தலும், மறதி நோயால் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

8. நோய் பாதித்தோரை எப்படி கவனிப்பது?

மறதி நோய் உள்ளவர்களை, ஏறக்குறைய ஒரு குழந்தையைப் போல் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்நேரமும், ஒருவர் உடன் இருக்க வேண்டும். மருந்து, மாத்திரைகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொடுப்பதுடன், அவற்றை பூட்டி பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஏனென்றால், ஞாபக மறதியில், அவர்கள் மீண்டும் மீண்டும் மாத்திரைகளை உட்கொள்ள வாய்ப்புண்டு.

9. மறதி நோயாளியின் அறையை அடிக்கடி மாற்றுவது சரியா?

மறதி நோய் உள்ளோர் நல்ல நிலையில் இருக்கும்போதே சொத்து-பணம், முதலிய முக்கிய விவரங்களை, நம்பகமான பாதுகாவலர்களிடம் தெரிவிப்பது நல்லது.

வீட்டின் அனைத்து அறைகளிலும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், படங்களை மாட்டி, அன்றாட நடைமுறை செயல்கள் எளிதாக புரிய உதவி செய்யலாம்.

கழிப்பறையில் வழுக்காத தரை இருத்தல்; உதவிக்கு கைபிடிகள் இருந்தால் நல்லது. அவர்களின் அறைகளை அடிக்கடி மாற்றக்கூடாது. அன்புடன், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவை.

டாக்டர் கே.பானு,

பேராசிரியர், மூளை நரம்பியல்

மருத்துவத்துறை, ராஜிவ் காந்தி அரசு

பொது மருத்துவமனை, சென்னை.







      Dinamalar
      Follow us