PUBLISHED ON : செப் 23, 2015

நீச்சல் பயிற்சி முடித்து, குளத்தில் இருந்து வெளியே வந்ததும், உடம்பில் வியர்வைத் துளிகள் அதிக அளவில் உருவாகும். அது, நீர்ப்போக்கு எனப்படும்.
நீச்சல் பயிற்சியால் தோல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், வறட்சியான மற்றும் சீரற்ற தோல் ஏற்படவும் காரணமாகிறது.
நீச்சலினால் ஏற்படும் தோல் பிரச்னைகளில், தோல் வெடிப்பும் ஒன்று. வழக்கமாக மேற்கொள்ளப்படும் நீச்சலால், தோலில் அரிப்பு மற்றும் சிவப்பு தடிப்புகளும் ஏற்படக் கூடும். இளம் வயதினர் கூட, நீச்சல் பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது, தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு, முதிர்ச்சியான தோற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
சில நேரங்களில், சூரிய ஒளி தாக்குதலால், உடலில் வேனல் கட்டிகள் ஏற்படுகின்றன. குளிர்ந்த நீரில் நீச்சல் பயிற்சியை முடித்துவிட்டு, சூடான நீர் பீய்ச்சியடிக்கும், 'ஷவர்' குளியல் மேற்கொள்வது, தவறு. அது உடலுக்கும் தோலுக்கும் ஆரோக்கியமானது அல்ல. அதுவும், தோல் பிரச்னைகளுக்கு காரணமாகிறது.
நீச்சல் குள தண்ணீரில் கலந்திருக்கும் குளோரின் தோலில் படிமங்களாக படிந்திருக்கும். குளோரின் படிமங்கள் சூடான மற்றும் நீராவியால், தோலில் ஆழமாக ஊடுருவ செய்யும். இது, வறட்சியான தோலை உருவாக்கும். எனவே, நீச்சலில் ஈடுபடும்முன், ஒவ்வொருவரும் குளோரின் முதற்கொண்டு, தோலுக்கும் உடம்புக்கும் அபாயத்தை விளைவிக்கும் அத்தனை காரணிகள் மீதும், கவனம் வைக்க வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் போது, பிரச்னைகளில் இருந்து தப்பலாம்.
த. மனோகர், சரும நோய் நிபுணர். அரக்கோணம்.

