தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள்: பளிச்பதில்கள்

பத்து கேள்விகள்: பளிச்பதில்கள்

பத்து கேள்விகள்: பளிச்பதில்கள்


PUBLISHED ON : ஜன 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டிமென்சியா' என்பது என்ன?

டிமென்சியா என்பது, ஒரு தனிக்குறைபாடு அல்ல. மூளையின் திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதம் காரணமாக, வரும் பிரச்னையே.

டிமென்சியாவால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

இந்த சேதத்தால், மக்கள் அல்சைமர் அல்லது பார்க்கின்சன் போன்ற மூளைச் சிதைவு குறைபாடு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.



இதன் அறிகுறிகள்?

ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள்,சிந்தித்தல் மற்றும் புரிந்து கொள்ளுதலில் சிரமங்கள், பிரச்னைகளைத் தீர்க்க இயலாமல் சிரமப்படுதல், மொழிக் குறைபாடுகள் போன்றவை. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய தினசரி நடவடிக்கைகளைச் செய்ய இயலாமல் சிரமப்படுகின்றனர்.

டிமென்சியாவால் எவ்வளவு பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருப்பர்?

ஒரு ஆய்வின்படி, நம் நாட்டில், 38 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், டிமென்சியாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 2030 ஆண்டிற்குள், இந்த எண், இரு மடங்கு ஆகிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

டிமென்சியாவில் வகைகள் உள்ளதா?

டிமென்சியாவில் பல வகைகள் உண்டு; இவை ஒவ்வொன்றுக்கும், அதை உண்டாக்கும் நோய் அல்லது நிலையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டிமென்சியா பாதிப்பால் அல்சைமர் வரும் என்கின்றனரே?

டிமென்சியாவின் மிகப்பொதுவான வகை இது தான். இதனால் அல்சைமர் குறைபாடு ஏற்பட்டு, பொதுவாக, ஏழு முதல், 10 ஆண்டுகளுக்கு மெதுவாக வளர்கிறது. மூளையின் அறிவாற்றல் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகின்றன, ஒரு கட்டத்தில் ஞாபக சக்தி, மொழி, தீர்மானம் எடுத்தல் மற்றும் வெளி சார்ந்த திறன்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகள் செயல்படுவதை நிறுத்தி விடுகின்றன.

டிமென்சியாவினால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்ன?

லெவி பாடீஸ் என்றால், மூளையில் காணப்படும் அசாதாரணமான புரதக் கட்டிகள் ஆகும். இந்த வகை டிமென்சியாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, 'ரேபிட் ஐ மூவ்மென்ட்' (REM) எனப்படும் நிலையும் பொதுவாகக் காணப்படுகிறது, இவர்களுக்குத் துாக்க குறைபாடும் இருக்கலாம்.

ரேபிட் ஐ மூவ்மென்ட் வகை டிமென்சியா எந்த வயதினரை அதிகம் பாதிக்கிறது?

இவ்வகை டிமென்சியா 40 முதல் 65 வயதுடையவர்களைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாடு கொண்டவர்களுடைய மூளையின் முன் மற்றும் டெம்போரல் லோப்களில் உள்ள நரம்பு செல்கள் சிதையத் துவங்குகின்றன.

இவ்வகை டிமென்சியா எதனால் ஏற்படுகிறது?

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில், ரத்த ஓட்டம் குறைந்தால் அல்லது தடுக்கப்பட்டால், அதன் மூலம், மூளை சேதமடைந்து, இந்த வகை டிமென்சியா ஏற்படக்கூடும். பக்கவாதம், இதய வால்வுகளில் நோய்த் தொற்று அல்லது பிற வாஸ்குலர் பிரச்னைகளால் மூளை சேதமடையலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?

டிமென்சியா நோயாளிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக டிமென்சியா பற்றிய புரிதல், குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். சிகிச்சையாக சோல்பிடின் மாத்திரைகளை வழங்கலாம். துாக்கத்திற்காக, ஆன்டி சைக்யாட்ரிக் மாத்திரைகளை வைட்டமின், ஹலோபெரிடால் மாத்திரைகள், டிமென்சியாவின் பாதிப்புகளை குறைக்க உதவும்.

ரிப்பப்ளிகா ஸ்ரீதர்,

வலி நிவாரணம் மற்றும்

ஆதரவு சிகிச்சை நிபுணர்.

93810 16588

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us