sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : டிச 10, 2014

Google News

PUBLISHED ON : டிச 10, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1கண் நோய்கள் வர முக்கிய காரணம் என்ன?

ஊட்டச் சத்தில்லாத உணவுகள், பார்வை நரம்பில் ஏற்படும் ரத்தக் குறைவு, ரத்த ஓட்டம் தடைபடுதல், ரத்த அழுத்தம் குறைவு மற்றும் பரம்பரைக் காரணங்களாலும் கூட கண் நோய்கள் வரலாம்.

2குழந்தைகளின் பார்வைக் கோளாறுகளை கண்டறிவது எப்படி?

பாடங்களை கவனிக்கும்போது தலைவலி அல்லது களைப்பு; கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுதல்; இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமல் இருத்தல்; கடைக்கண் இமை சிவந்து வீங்கி இருத்தல்; சாதாரணமாக இருக்கும்போதோ, படிக்கும்போதோ கண்களில் நீர் வடிதல்; கண்களில் அடிக்கடி கட்டிகள் வருவது உள்ளிட்ட அறிகுறிகளால் கண்டறியலாம்.

3 'சிதறல் பார்வை' எதனால் ஏற்படுகிறது?

சில ஒளிக்கதிர்கள் விழித்திரையிலும், சில ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்போ, முன்போ விழுமானால், காட்சி தெளிவாகத் தெரியாது. கண்ணைச் சிரமப்படுத்தி பார்க்க வேண்டியிருக்கும். இதைத்தான் 'சிதறல் பார்வை' என்கிறோம். விழித்திரை வடிவத்தில் உண்டாகின்ற கோளாறுதான் இதற்கு முக்கிய காரணம். இப்பிரச்னைக்கு குவிலென்ஸ் தீர்வாகும்!

4கண் சம்பந்தப்பட்ட முக்கிய நோய்கள் என்னென்ன?

கிட்டப்பார்வை, துாரப்பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், பூ விழுதல், நீர் வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறுகளால் தலைவலி, மஞ்சள்காமாலை மூலமாக வரும் தொற்றுநோய், கண் கோளாறுகளால் வரும் துாக்கமின்மை... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

5வெள்ௌழுத்து எதனால் வருகிறது?

வானத்தின் நட்சத்திரங்களை பார்த்துவிட்டு, உடனே கையில் இருக்கும் புத்தகத்தை நம்மால் படிக்க முடிகிறதென்றால், அதற்கு நம் விழிலென்சின் மீள்திறன் தான் காரணம். ஆனால், வயதாக ஆக, நம் விழியின் லென்ஸ் கடினமாகி விடுவதால் மீள்திறன் குறைந்து, இவ்வேலையை செய்ய முடியாமல் போகிறது. இதுதான் வெள்ௌழுத்து.

6வயதானால் கண்ணில் ஏற்படும் அதிமுக்கிய பிரச்னை?

நாற்பது வயதுக்கு மேல், கண்ணில் வருகின்ற முக்கிய பிரச்னை கண்புரை. பளிங்கு போல் இருக்கின்ற நம் விழி லென்சில் புரதம் படிந்து அழுக்கேறிப் போவதால், ஒளிக்கதிர்கள் சரியாக ஊடுருவ முடியாமல் போகிறது. இதனால் விழித்திரையில் பதியும் பிம்பம் தெளிவில்லாமல் போய், பார்வை மங்கலாகிறது.

7ரத்த அழுத்தம் போன்று கண்களுக்கும் அழுத்தம் உண்டா?

கண்ணின் முன்பகுதியில், விழித்திரைக்கும், லென்சுக்கும் இடையில் 'அக்குவேஸ் ஹியூமர்' எனும் திரவம் சுரக்கிறது. இதில் இருக்கின்ற அழுத்தம் கண் நீர் அழுத்தம் எனப்படும். பொதுவாக, 15 முதல் 20 மி.மீ., வரை இதன் பாதரச அளவு இருக்கும். சில காரணங்களால், இது படிப்படியாக அதிகரிக்கும் போது, பார்வை நரம்பால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. இதுவே கண் நீர் அழுத்தம் எனப்படும்.

8உடல் உஷ்ணமானால் கண்வலி வருமா?

அப்படியல்ல! பாக்டீரியா, வைரஸ், போன்ற கிருமிகள் விழி வெண்படலத்தை தாக்கும் போது, கண்வலி வரும். கண்வலி ஒரு தொற்று நோய் என்பதால், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

9'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்பது?

பொதுவாக நாம் நிமிடத்திற்கு 12 முறை கண்களைச் சிமிட்டுவோம். ஆனால், கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 5 முறைதான் கண் சிமிட்டுகின்றனர். இதனால், கண்கள் வறண்டு போய், கண் எரிச்சல், உறுத்தல், தலைவலி உள்ளிட்ட தொல்லைகள் வருகின்றன. இதற்கு பெயரே கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்.

10ஊட்டச்சத்து குறைபாடு, கண் நோய்களுக்கு காரணமாகுமா?

இளம்வயதில் பார்வை இழப்பது, விழி வெண்படலம் வறட்சி அடைவது, அதில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றுவது, மாலைக்கண் நோய் ஏற்படுவது போன்றவற்றிற்கு 'வைட்டமின் ஏ' குறைபாடுதான் முக்கியக் காரணம். பச்சைக்காய்கறிகள், கீரைகள், பால், முட்டை, மீன், இறைச்சி, கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், முருங்கைக்காய், பப்பாளி, மாம்பழம் போன்றவற்றை சாப்பிட்டாலே, இந்நோய்கள் தீண்டாது.

- டாக்டர் கணேசன்

கண் மருத்துவர்.






      Dinamalar
      Follow us