sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

/

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : அக் 14, 2015

Google News

PUBLISHED ON : அக் 14, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. குதிகால் வலி என்பது குறைபாடா அல்லது நோயா?

காலையில் எழுந்ததும், குதிகாலில் துவங்கி, கால் முழுவதும் வலி பரவும். வலியைப் பொறுத்துக் கொண்டு, நடக்கத் துவங்கி விட்டால், வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பின், பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு, 'பிளான்டார் பேசியைட்டிஸ்'

என்று பெயர்.

2. என்ன காரணம்?

குதிகால் எலும்பில் இருந்து, 'பிளான்டார் அப்போநீரோசிஸ்' எனும் திசுக்கொத்து, கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும், இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில், ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால், குதிகால் வலி ஏற்படுகிறது.

3. காலில் எலும்பு வளர்ந்திருந்தாலும் குதிகால் வலி வருமா?

குதிகால் எலும்பும், தசைநார்களும் உராய்வதைத் தடுக்க, 'பர்சா' எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கினாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும், திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்து விடும். இதற்கு, 'கால்கேனியல் ஸ்பர்' என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.

4. மேற்சொன்ன காரணங்கள் தவிர வேறு என்ன காரணங்கள் உள்ளன?

சிலருக்கு ரத்தத்தில், 'யூரிக்' அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். முடக்குவாதம், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் வரலாம்.

5. எந்த வயதில் குதிகால் வலி வரும்?

முப்பது வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் வரலாம். அதிக உடல் எடை உள்ளோருக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். அப்பா, அம்மாவுக்கு இது இருக்குமானால், அவர்கள் வாரிசுகளுக்கும் ஏற்படுவது உண்டு.

6. யாரெல்லாம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது?

நீண்ட நேரம் நின்று வேலை செய்வோர், விளையாட்டு வீரர்கள், ராணுவ பணி செய்வோர் ஆகியோருக்கு இது வருகிறது.

7. 'ஹை ஹீல்ஸ்' செருப்புகளை அணிந்தால், 'பிளான்டார்' பாதிப்பு வருமா?

குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவும், 'ஹை ஹீல்ஸ்' காலணிகள், பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டு நடக்கும்போது, 'பிளான்டார்' திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்தி விடும்.

8. நீரிழிவு நோய் உள்ளோருக்கு இந்த பாதிப்பு ஏற்படுமா?

நீரிழிவு நோய் உள்ளோருக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீத சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் துவங்கும். இதன் விளைவால் அவர்களுக்குக் குதிகால் வலி வரும்.

9. இந்த பிரச்னைக்கு என்ன சிகிச்சைகள் உள்ளன?

குதிகால் எலும்புக்கு, 'எக்ஸ்-ரே, சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், யூரிக்' அமிலம், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட, சில பரிசோதனைகளைச் செய்து காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

இயன்முறை பயிற்சியும் (பிசியோதெரபி) இந்த வலியைப் போக்க உதவும். காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை, ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின், தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறி மாறி, 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். வலியும் நிரந்தரமாக விடைபெறும்.

10. தடுக்க என்ன வழி உள்ளது?

குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுவோர், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவது தடுக்கப்படும். 'எம்.சி.ஆர்.,' (மைக்ரோ செல்லுலார் ரப்பர்) செருப்புகளை அணிந்து நடப்பது இன்னும் நல்லது.

- சி.ஜெ.வெற்றிவேல், எலும்பு நிபுணர்.

தி.நகர், சென்னை.

www.bewellhospitals.net

98406 31359







      Dinamalar
      Follow us