தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : பிப் 24, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரத்த சோகை என்றால் என்ன?

உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்த உதவும் ரத்த சிவப்பணுக்கள் புரதமும் இரும்பும் சேர்ந்தது, 'ஹீமோகுளோபின்!' இந்த சத்துக்கள் குறைவதால் ஏற்படுவதே ரத்த சோகை.

ரத்த சோகை ஏற்பட காரணங்கள் என்ன?

அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது, பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவது, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகளால் அதிக ரத்தப் போக்கு போன்றவை முக்கிய காரணங்கள். இதுதவிர, பிரதான காரணம், பி12 வைட்டமின் குறைபாடு. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் என்பதில்லை. உடலில் எந்த ஒரு செல் வளர வேண்டும் என்றாலும் அதன் வளர்ச்சி ஊக்கி,

வைட்டமின் பி12. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு வளராமல் ரத்த சோகை ஏற்படும்.

ரத்த சோகை இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?

மயக்கம், சோர்வு, உடல் வெளுத்து காணப்படுவது, நகங்களில் குழி விழுதல், நாக்கு வெளுத்து இருத்தல், மூச்சு விடுவதில் சிரமம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை போன்றவையே. ரத்த சோகையால் கர்ப்பிணிகளுக்கு

ஏற்படும் பிரச்னைகள் என்ன?

பிரசவத்தின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்த இழப்பு, ரத்த சோகை இருந்தால், உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தாய்க்கு ரத்த சோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைக்கும் ரத்த சோகை ஏற்படலாம்.

இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த சோகையால் பாதிப்பு ஏற்படுமா?

ரத்த சோகையின் காரணமாக, ரத்தத்தில் எடுத்து செல்லப்படும் ஆக்சிஜனின் அளவு குறைவதால், அதிக ஆக்சிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை, 'பம்ப்' செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில், இதயம் செயலிழக்கக் கூடும்.

ரத்த சோகை காரணமாக நரம்புகள் பாதிப்படையுமா?

வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையில், நரம்புகள் சேதம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு, வைட்டமின் பி12 போதுமான அளவில் இருப்பது அவசியம். வைட்டமின் பி12 குறைபாட்டால்

ஏற்படும் ரத்த சோகை யாருக்கெல்லாம் வரலாம்?

அதிக ஆண்டுகள் சைவ உணவுகளையே சாப்பிடுபவர்களுக்கு வர வாய்ப்பிருக்கிறது. காரணம், வைட்டமின் பி12 பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் கிடைக்கும்.



ரத்த சோகைக்கான பரிசோதனைகள் என்னென்ன?


ரத்த சோகை இருப்பது, சாதாரண ரத்த பரிசோதனையின் மூலமே தெரிந்து விடும்.

ரத்த சோகைக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே போதுமா?

ரத்த சோகைக்கான காரணத்தை தெரிந்து, டாக்டரின் ஆலோசனைப்படி, இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரத்த சோகை நீங்க உணவுமுறை மாற்றம் அவசியமா?

உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரை வகைகள், பழங்கள், முழு தானியங்களுடன் சேர்த்து, போதுமான அளவு புரதச் சத்துள்ள உணவையும் சாப்பிடுவது முக்கியம்.

- கே.ஆர்.விஜய் சக்ரவர்த்தி

பொது மருத்துவ நிபுணர், சென்னை.

97513 10211

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us