தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஏப் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 06, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எது 'புராஸ்டேட்' சுரப்பி?

அடிவயிற்றில் சிறுநீர்ப் பைக்குக் கீழே, சிறுநீர்ப் புறவழி துவங்குகிற இடத்தில், சிறுநீர்ப் பையின் கழுத்தைச் சுற்றித் தசையாலான சுரப்பியே, 'புராஸ்டேட்' என்பர். இச்சுரப்பி ஆண்களுக்கு மட்டுமே உள்ளது.



புராஸ்டேட் சுரப்பியால் ஏற்படும் பொதுவான பிரச்னை என்ன?


வாலிபப் பருவத்தில் ஆரோக்கியமாக இருக்கும், 'புராஸ்டேட்' வயது ஆக ஆக வீக்கமடையும். 'பினைன் புராஸ்டேடிக் ஹைப்பர்பிளேசியா' என்று இதற்குப் பெயர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இந்த வீக்கம் ஏற்படுவது மிகச் சாதாரணமானது தான்.

இதன் அறிகுறிகள்?

சிறுகச் சிறுகச் சிறுநீர் கழித்தல். சிறுநீர் கழிக்கும்போது தடை உண்டாவது. சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும் போது தயக்கம் ஏற்படுதல். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல். சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவையே.

இதற்கான சிகிச்சைகள் என்னென்ன?

ஆரம்ப நிலையில் இதை மருந்துகள் மூலமே சமாளித்து விடலாம். முடியாதபோது, 'டிரான்ஸ் யுரேத்திரல் ரிசக் ஷன் ஆப் புராஸ்டேட்' எனும் அறுவை சிகிச்சை அல்லது நவீன முறையான லேசர் சிகிச்சையின் மூலம், 'புராஸ்டேட்' வீக்கத்தைக் குறைக்கலாம்.



'புராஸ்டேட்' வீக்கத்திற்கு புற்றுநோய் காரணமாக இருக்க வாய்ப்பு உண்டா?


இதன் அறிகுறிகள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் வருவது. விரைப்பைக்கு அடியிலோ, விரைகளிலோ வலி உண்டாகலாம். சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளியேறுவதற்குச் சிரமம் ஏற்படலாம்.

'புராஸ்டேட்' சுரப்பியிலுள்ள புற்றுநோயால் எவ்வகையான ஆபத்துகள் வரும்?

இந்த ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்து சிகிச்சை பெற்றால் நல்லது. இல்லையென்றால், பின்னாளில் நிணநீர் மற்றும் ரத்தத்தின் மூலமும் உடலில் பல இடங்களில் இது பரவிவிடும். குறிப்பாக, இது முதுகெலும்புக்குப் பரவத் துவங்கும். அப்போது முதுகெலும்பில் வலி ஏற்பட்டு நோய் பாதிப்பு கடுமையாகி விடும்.

பரிசோதனைகள் என்னென்ன உள்ளன?

டூநோயாளியின் ஆசனவாயில் மருத்துவர்கள் விரலை நுழைத்துப் பரிசோதிப்பர்

டூவயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை.

'புராஸ்டேட்' சுரப்பி வீக்கத்திற்கு ரத்தப் பரிசோதனை ஏதும் உள்ளதா?

பி.எஸ்.ஏ., என்ற ரத்த பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனை மூலம் புராஸ்டேட் சுரக்கும் அளவை தெரிந்து கொள்ளலாம். புராஸ்டேட் சுரக்கும் அளவு ஒரு மில்லி கிராம் ரத்தத்தில் 4 நானோ கிராமிற்கு மேலே இருந்தால், புற்று நோயாக இருக்க வாய்ப்புண்டு.

பி.எஸ்.ஏ., பரிசோதனையை எப்போது செய்யலாம்?

ஐம்பது வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், ஆண்டுக்கு ஒரு முறை செய்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது, 'புராஸ்டேட்' புற்றுநோய் வந்திருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்த ஆண்கள், 40 வயதிலிருந்தே ஆண்டுக்கு ஒருமுறை, பி.எஸ்.ஏ., பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

'புராஸ்டேட்' சுரப்பி புற்றுநோய்க்கு சிகிச்சைகள் என்ன?

புற்றுநோய் ஏற்பட்டுள்ள நிலையைப் பொறுத்து, நோயாளிக்குத் தேவைப்படுவது அறுவை சிகிச்சையா, கதிர்வீச்சு சிகிச்சையா எனத் தீர்மானிக்கப்படும்.

- து.ஜெயக்குமார்,

தலைவர் மற்றும் பேராசிரியர்,அரசு அறிஞர் அண்ணா

புற்றுநோய் மருத்துவமனை, காரப்பேட்டை, காஞ்சிபுரம்.

98402 56144

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us