PUBLISHED ON : ஏப் 13, 2016

1 ஆண்டிற்கு, 2 முறை கண்டிப்பாக பல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும், 'பாப்ஸ்மியர்' பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்
2 ஆயிரம் கலோரி தினமும் பெண்களுக்குத் தேவை என்பது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
8 கிராம் நார்ச்சத்துடன் உங்கள் காலை உணவு இருந்தால் அன்று முழுவதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்
20 நிமிடங்களுக்கு முன் எல்லா மின் சாதனங்களையும் அணைத்துவிட்டு தூங்கச் செல்லுங்கள்
20 சதவீதம் நாம் சாப்பிடும் உணவில் இருந்தே ஒரு நாளின் உடம்பின் நீர்த்தேவை கிடைக்கிறது. இதுதவிர, தினமும் 8 முதல் 9 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்
30 நிமிடங்கள் கழித்தே, (இரவு உணவுக்குப்பின்) பல் துலக்க வேண்டும்
150 நிமிடங்கள், ஒரு வாரத்திற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
