தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : அக் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆட்டிசம் என்றால் என்ன?

பிறப்பில் வரும் குறைபாடு இல்லை. இது வளர்நிறை குறைபாடு. அதாவது, Neurocognitive disorder. எண்ணங்கள், புரிதல், கற்றுக் கொள்வது இவற்றில் ஏற்படும் குறைபாடு ஆட்டிசம்.

ஆட்டிசம் பாதிப்பிற்கு என்ன காரணம்?

காரணம் தெரியவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. பரம்பரைக் காரணங்கள், சுற்றுச்சூழல் மாசு, கருவுற்ற தாயின் மன அழுத்தம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை, ரத்த அழுத்தம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பாதிப்பை கண்டுபிடிப்பது எப்படி?

பெயர் சொல்லிக் கூப்பிட்டால், குழந்தை திரும்பிப் பார்க்காது. கண்ணோடு கண் பார்க்காது. தேவையில்லாமல் அழும். காரணமில்லாமல் சிரிக்கும். அதிக நேரம் மின்னணு பொருட்களோடு (elctronic gadgets) விளையாட விரும்பும். ஒரே விஷயத்தை, திரும்பத் திரும்ப செய்ய விரும்பும். மாற்றம் இருந்தால் சிரமப்படும்.

எந்த வயதில் அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்?

கருவில் உள்ளபோது அல்லது பிறந்தவுடன் தெரியாது. ஒன்றரை வயதிலிருந்து 2 வயதிற்குள் இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

இந்த பாதிப்பை சரி செய்ய முடியுமா?

100 சதவீதம் சரி செய்ய முடியும் என்று சொல்ல முடியாது. 70 சதவீதம், சராசரி வாழ்க்கைக்கு பழக்கலாம்.

ஆட்டிசம் பாதிப்பிற்கு சிகிச்சை முறைகள் உள்ளதா?

மூளை வளர்ச்சி குறைபாடோ, நோயோ இல்லை இது. பேச்சுப் பயிற்சி, பிசியோதெரபி, தொடர்பு பயிற்சி இப்படி சராசரி வாழ்க்கைக்கு தேவையான பயிற்சிகள்தான் தர வேண்டும்.

ஓரிரு மாதங்கள் மருந்து சாப்பிட்டால், ஆட்டிசத்தை குணப்படுத்த முடியும் என்ற விளம்பரங்கள் குறித்து?

நோய் என்றால்தானே குணப்படுத்த முடியும். இது ஒரு குறைபாடு. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளிடம் தனித் திறமை ஒன்று இருக்கும். அதைக் கண்டுபிடித்து, பயிற்சி அளிப்பதுதான் முக்கியம்.

அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக ஒரு குழந்தை நல மருத்துவர், குழந்தை நல மனநல மருத்துவர், குழந்தை நல நரம்பியல் மருத்துவர், குழந்தை நல மனநல ஆலோசகர், இந்த நான்கு பேரிடமும் ஆலோசனை பெற வேண்டும்.

சிறப்புப் பள்ளிகளில்தான் இவர்களை சேர்க்க வேண்டுமா?

அவசியம் இல்லை. தற்போது, பொது பள்ளிகளிலும் சிறப்பு பயிற்சியாளரைக் கொண்டு, இது போன்ற குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு அரசு தரும் சலுகைகள் என்ன?

சிறப்பு குழந்தைகள் பிரிவில் சேர்த்து, உதவித் தொகை தருகின்றனர். ரயில், பேருந்து, விமானப் பயணங்களில் சலுகை உள்ளது.

டாக்டர் வி.தேவகி

குழந்தைகள் மன நல மருத்துவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us