தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முகத்தின் அழகு மூக்கில் இருக்கு!

முகத்தின் அழகு மூக்கில் இருக்கு!

முகத்தின் அழகு மூக்கில் இருக்கு!


PUBLISHED ON : மார் 29, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவரின் முகத்தில் மூக்கு எப்படி அமைந்துள்ளதோ, அதுவே அவரது முக லட்சணத்துக்கு காரணமாகும். இப்பேர்ப்பட்ட மூக்கை பத்திரமாக பராமரிக்க வேண்டும். மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால், வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மென்ட்டே போதும்.

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்னை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இவை இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். கடைகளில் விற்பனை செய்யப்படும் பிளாக் ஹெட்ஸ் ரிமூவல் ஸ்ட்ரிப்ஸ், அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால், நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது.

நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு சரியான ட்ரீட்மென்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல், எண்ணெய் பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை, மூக்கின் மேல் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் மீது பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வியர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.

இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில், பிளாக் ஹெட் ரிமூவரால் மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்து விடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில், மூக்கை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மென்ட்டை செய்யும் முன், முகத்திற்கு ஸ்க்ரப் போட்டுக் கொள்ளலாம். ட்ரீட்மென்ட்டுக்குப் பின், ஸ்க்ரப்பிங் கூடாது.

வாரம் ஒரு முறை முகத்தை ஸ்க்ரப் செய்யும்போது, மூக்கு பகுதியில் பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது. அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும், பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். மூக்குக்கு மேக்கப் போடும் போது, மூக்கு வடிவத்துக்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும்.

சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு, பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்ய வேண்டும்.

நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல், டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும்.

டார்க் ஷேட் ரூஜைக் கொண்டே, மூக்கின் ஷேப்பை அழகாக்கி விட முடியும். ஆனால், இவ்வித மேக்கப் போடும் போது, அடிக்கடி செய்து பார்த்து பழகிக் கொள்வது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us