தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!


PUBLISHED ON : மார் 29, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகிப்பன நகங்கள். நகங்களை, முறையாக பராமரிப்பது அவசியம். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில், நகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால், நகம் அதை வெளிப்படுத்தி விடும். நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

வைட்டமின் சி குறைபாடு இருந்தால், நகங்கள் பாதிக்கப்படும். நகம் கடிக்கும் பழக்கம், உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால், எளிதில் நோய் உபாதைகளுக்கு வழி வகுத்து விடும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிப்பிடத்துக்கு சென்று வந்த பின்பும், கைகளை நன்றாக, சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்.

பெண்கள் பாத்திரம் தேய்த்த பின், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள், நகக்கணுக்களில் தங்கிவிட்டால், நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குழந்தைப் பருவம் தொட்டே, இத்தகைய பழக்கங்களை ஏற்படுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள், நக பராமரிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும். கை நகங்களை போலவே கால் நகங்களின் பராமரிப்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

பெரும்பாலான நோய் தொற்றுகளுக்கு, நகமே முக்கிய காரணம். பெடிக்யூர், மெனிக்யூர் என, நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன. இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும், வீட்டிலேயே செய்து கொள்வது எளிது. வாரத்தில், இரண்டு அல்லது மூன்று முறை, இந்த பராமரிப்பு முறையை மேற்கொள்ளலாம். நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ, மருத்துவரை நாடுவது நல்லது. மருத்துவக் குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து

கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது. அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும். இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம்.

உணவில், அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும், மருத்துவர் பரிந்துரையின் பேரிலும், கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும், பாதிப்பு சரியாகும். சர்க்கரை நோயாளிகள், இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், பழங்கள் என, ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம். இதில், எவ்விதத்திலும் அலட்சியம் காட்டக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us