sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/இருதயம் காப்போம் அடிக்கடி படபடப்பு ஏற்படுகிறதே...

இருதயம் காப்போம் அடிக்கடி படபடப்பு ஏற்படுகிறதே...

இருதயம் காப்போம் அடிக்கடி படபடப்பு ஏற்படுகிறதே...


PUBLISHED ON : ஜூன் 05, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2011


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.சீத்தாராமன், கோவை

எனது வயது 42. சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குகிறது. எக்கோ பரிசோதனை செய்ததில் 'Bicuspid AV, Severe AS' என வந்துள்ளது. இது என்ன வியாதி?

இருதயத்தின் இடது புறத்தில் இருக்கும் ஒரு வால்வு அயோட்டிக் வால்வு. இதில் நார்மலாக 3 கதவுகள் இருக்கும். ஆனால் மிகச் சிலருக்கு, பிறவியிலேயே 2 கதவுகள் இருக்கும். இதைத்தான் Bicuspid என்பர். இதனால் நாளடைவில், இந்த வால்வில் பழுது ஏற்பட்டு அடைப்பு, ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் Severe Aortic Stenosis என்பர். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் பழுதான வால்வை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக செயற்கை வால்வை பொருத்துவது சிறந்தது. இதற்கு அயோட்டிக் வால்வு ரீப்ளேஸ்மென்ட் சர்ஜரி என்று பெயர்.

எம். கணபதி, காரைக்குடி

எனது இருதயத்தில், ஸ்டென்ட் பொருத்தி 4 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு 'Combiplet' என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தற்போது இது தொடர்ந்து கிடைப்பதில்லை. இதற்கு பதில் வேறு மாத்திரையை எடுத்துக் கொள்ளலாமா?

ஸ்டென்ட் பொருத்தியவர்கள் மருந்து மாத்திரை எடுப்பது அவசியம். அதிலும் 'மெடிகேட்டட் ஸ்டென்ட்' பொருத்தியவர்களுக்கு, கூடுதல் அவசியம் உள்ளது. ஏனெனில் இந்த மாத்திரையை நிறுத்தி விட்டால், ஸ்டென்ட் திடீரென மூடிக் கொள்ளும் தன்மை ஏற்படுகிறது. எனவே, 'ஸ்டென்ட்' பொருத்திய அனைவரும் வேளை தவறாமல் அவசியம் டாக்டர் தந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். 'Combiplet' என்ற மாத்திரையில் ஆஸ்பிரின் மற்றும் குளோபிடோகிரில் (Aspirin, Clopidogrel) என்ற 2 மருந்துகள் உள் ளன. தற்போது இந்த மாத்திரை, 'ClopiletA' என்ற பெயரில் வருகிறது. நீங்கள் குளோபிலெட்-ஏ மாத்திரையை இனி எடுத்துக் கொள்ளலாம்.

வி. ராஜராஜன், திண்டுக்கல்

எனக்கு அடிக்கடி படபடப்பு ஏற்படுகிறது. இ.சி.ஜி., எடுத்ததில், W.P.W.Syndrome என்ற வியாதி உள்ளதாக வந்தது. இது என்ன வியாதி?

Wolff Parkinson White Syndrome என்பதே இதன் சுருக்கம். இது இருதய மின்னோட்டத்தில் சிறு மாறுதல் ஏற்பட்டு, அதனால் மின்னோட்டம் மாற்றுப்பாதையில் செல்வதை குறிக்கிறது. இப்படி இருப்பவருக்கு இருதய துடிப்பு கூடும் தன்மை ஏற்படுகிறது. இதற்கு மருந்து, மாத்திரை மூலம் வியாதியை கட்டுப்படுத்த முடியும். தற்போது நவீன சிகிச்சையாக, 'ரேடியோ பிரீக்வன்சி அப்லேஷன்' (Radio Frequency Ablation) என்ற சிகிச்சை முறை உள்ளது. இதில் அறுவை சிகிச்சை இன்றி, ஒரு கதீட்டர் மூலம் இருதய மின்னோட்டம் சரி செய்யப்படுகிறது. இச்சிகிச்சை செய்துவிட்டால், மருந்து மாத்திரை எடுக்க தேவையில்லை. இச்சிகிச்சையின்போது, 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தால் போதுமானது.

எஸ். சுஜாதா, ராஜபாளையம்

எனது வயது 44. வேலையின்றி ஓய்வாக இருக்கும் போதும்கூட இடது தோள்பட்டையில் வலி ஏற்பட்டு, சிறிது நேரம் தொடர்கிறது. இது எதனால்?

ஓய்வு நேரம் தோள்பட்டையில் ஏற்படும் வலி, இருதய பாதிப்பால் ஏற்படும் வலியாக இருக்கும் தன்மை மிகவும் குறைவு.இருந்தாலும் இடது தோள்பட்டை, கை, முதுகு, மார்பு பகுதிகளில் ஏற்படும் வலியை அலட்சியப்படுத்தவே கூடாது. உங்களுக்கு எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகள் செய்வது அவசியம். இவை இரண்டும் நார்மலாக இருந்தால் இருதய வலி அல்ல என்பது உறுதியாகிறது. அப்படி இல்லையெனில் தசை, நரம்பு, எலும்பில் இருந்து வரும் வலியாக இருக்கலாம். எங்கிருந்து வலி ஏற்படுகிறது என்பதை பொறுத்து உங்களுக்கு சிகிச்சை முறை அமையும்.



டாக்டர் சி. விவேக் போஸ், மதுரை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us