தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அலைபேசி குழந்தைகளின் மாற்றாந்தாய்!

அலைபேசி குழந்தைகளின் மாற்றாந்தாய்!

அலைபேசி குழந்தைகளின் மாற்றாந்தாய்!


PUBLISHED ON : செப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

அலைபேசி குழந்தைகளுக்கு எவ்வளவு துாரம் தாக்கத்தை ஏற்படுத்தும்

முன்பு நிலாவை காட்டி தாயார் கதை சொல்லி சுவையான, ஆரோக்கியமான உணவை சமைத்து ஊட்டியதால் குழந்தைகள் விரும்பி உண்டனர். குழந்தைக்கு நல்ல கவனிப்பு திறனும், புரிந்து கொள்ளும் திறனும் இருந்தது. ஆனால் இன்று போதிய நேரத்தை குழந்தைகளிடம் செலவிடாமலும், குழந்தைக்கு சத்தான உணவுகளை கொடுக்காததாலும், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய் விட்டது. அலைபேசியை காட்டி உணவு ஊட்டுவதால் குழந்தைக்கு உணவின் சுவை அறியாமல் போவதால் குழந்தைகள் சரிவர உண்பதில்லை. மேலும் தாய், குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் குறைகிறது. இதனால் குழந்தைக்கு மாற்றுத்தாயாக அலைபேசி விளங்குகிறது.

அலைபேசியில் இருந்து வரும் 'போர்ட்டான்ஸ்' என்ற ஒளிக்கதிரினால் கண் எரிச்சல், கண் வலி ஏற்படும். கவனச்சிதறல், குழந்தைகள் யதார்த்தமாக பார்க்கும் விதம் மாறுபடும். உதாரணமாக நேரில் பார்க்கும் உண்மையான வண்ணத்தை விட அதிக வண்ணத்தில் அலைபேசியில் தெரிவதால் குழந்தைக்கு உண்மையான வண்ணம் தெரியாமல் போய் விடுகிறது. தொடர்ந்து குழந்தைகள் அலைபேசியை பயன்படுத்துவதால் நாளடைவில் கண் புரை நோய், கண்ணில் உள்ள லென்ஸ் பாதிப்பு, துாக்கமின்மை, பிடிவாதம், வலிப்பு, நரம்பு மண்டல கோளாறு ஏற்படும். பெற்றோர்களுடன் பேசும் நேரம் குறையும். ஓடி விளையாடாமல் வீட்டில் உட்கார்ந்தபடியே அலைபேசியில் விளையாடுவதால் குழந்தைக்கு பசியின்மை ஏற்படும்.

அலைபேசியை தவிர்த்து குழந்தைகளுடன் எவ்வாறு நேரத்தை செலவிடுவது?

பெற்றோர்கள், குழந்தைகள் முன்போ, அருகிலோ அலைபேசியை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட கதைகள், பாடல்களை காண்பித்தும், பேச வைத்தும், உணவு ஊட்டுவதை விட குழந்தைகளுக்காக பெற்றோர்கள் நேரத்தை செலவிட்டு அறிவு சார்ந்த கற்பனை கதைகளை கூறி உணவு ஊட்ட வேண்டும். குழந்தைகளை வெளியில் அழைத்து சென்று விளையாட வைப்பதால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இவற்றின் மூலம் குழந்தைகளை அலைபேசிக்கு அடிமையாகாமல் தவிர்க்கலாம்.

காகிதத்தால் செய்யக்கூடிய கலைப்பொருட்கள், களி மண்ணை பயன்படுத்தி செய்யக்கூடிய பொம்மைகள் போன்ற செயல்களை செய்யுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதனால் குழந்தையின் கற்பனை திறன் மட்டுமல்லாது அறிவுத்திறனும் மேம்படும். பள்ளிகளின் விளையாட்டு மைதானத்தில் விளையாடக்கூடிய விளையாட்டுக்களை ஆசிரியர்கள் கற்று கொடுத்து, அந்த விளையாட்டுகள் மீது உள்ள ஆர்வத்தை வளரச் செய்ய வேண்டும்.

- டாக்டர் பிரசன்ன கார்த்திக், குழந்தைகள் நல மருத்துவர்

மதுரை. அலைபேசி: 96299 02323


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us