sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம்!

ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம்!

ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம்!


PUBLISHED ON : ஜூலை 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாடு உட்பட ஆசிய நாடுகளில், மரபணுக்களில், இடுப்பைச் சுற்றி, 'வெயிட்' போடக் கூடிய தன்மை அதிகம். மொத்த உடலும் எடை கூடுவதை விட, வயிறு, இடுப்பைச் சுற்றி எடை போடுபவர்களுக்கே சர்க்கரை கோளாறு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகம் வருகின்றன.

இன்று 80, 90 வயது முதியவர்கள், இடுப்பைச் சுற்றி சதையே இல்லாமல் இருக்கின்றனர். அவர்களின் உணவும், உடல் உழைப்பும் வேறு. மிகக் குறைந்த அளவு இயற்கையான தானியங்கள், காய்கறிகள் சாப்பிட்டு, உடல் உழைப்பை அதிகம் செய்தனர்.

எவ்வளவு துாரம் ஆனாலும் நடந்தே போவர்; வீட்டில் எல்லா வேலைகளையும் அவர்களே செய்தனர். விசேஷ நாட்களில் மட்டுமே அரிசி சாதம் சாப்பிட்டனர். ஜப்பானில் குறிப்பிட்ட தீவில் வசிப்பவர்களின் நீண்ட வாழ்நாள் ரகசியம் இது தான்.

வாழ்வின் கடைசி நாள் வரை, நிதானமாக உழைக்க வேண்டும். இயற்கையுடன் ஒன்றி, நம் மீது அன்பானவர்கள் நடுவில், மன அழுத்தம் இல்லாமல் புன்னகையுடன் அமைதியாக வாழ வேண்டும்.

- நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ற ஜப்பானியர்களின் வாழ்க்கை குறிப்பான, 'இக்கிகாய்'யிலிருந்து

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us