தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/நகங்களின் ரகசியம்!

நகங்களின் ரகசியம்!

நகங்களின் ரகசியம்!


PUBLISHED ON : ஜூன் 07, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம். இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத

கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக வளர்கிறது.

நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று, இரு முக்கிய பாகங்கள் உண்டு. இதில், மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயப்பகுதியை போன்றது. இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கின்றன. மேட்ரிக்ஸ் பாதித்தால், தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். வெளிபுற நகங்களாக இருக்கும், நெயில் பிளேட் கழிவுபொருள் என்பதால், அது வளர ஆக்ஸிஜன் தேவையில்லை.

ஆனால், உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு, ஆக்ஸிஜன் அவசியம். இது, சுவாசிப்பதன் மூலம் பெறும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. இதில், கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது. நகத்தில், 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே, நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றுகின்றன. நகங்கள் நமது உடலின் நிலையை வெளிகாட்டும், மானிட்டர் போல செயல்படுகின்றன.

நகங்கள், விரலுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தை கொண்ட நகங்கள், விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். பொதுவாக, நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நிறம் மாறுபடும் பட்சத்தில், நோய் அறிகுறிகளை அறியலாம். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து, பாதி சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு, நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு, நகங்கள் வளைந்து இருக்கும். இரத்த சோகை ஏற்பட்டு, இரும்புசத்து குறைவாக இருந்தால், நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகங்கள் வெண்திட்டுக்கள் காணப்படும். மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாக காட்டும். நகங்களின் நுனிப்பகுதிகளை முழுமையாக வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், நகத்தை மூடி சதை வளர்ந்து, அதிக வலியினை ஏற்படுத்தும்.

நகத்தினை பற்களால், கடிக்க கூடாது. இதனால் உடைந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளன. சாப்பிட்ட பின்பு, கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும். பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், காய், கனிகள் உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரால், கை மற்றும் கால்நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us