sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 17, 2026 ,தை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

மன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்!

/

மன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்!

மன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்!

மன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்!


PUBLISHED ON : செப் 15, 2020

Google News

PUBLISHED ON : செப் 15, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நுரையீரலுக்கு, 100 சதவீதம் ஆக்சிஜன் கிடைக்க, எளிமையான சில சுவாசப் பயிற்சிகளை செய்தால் போதும். கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும், எந்த நிலையில் தொற்று இருந்தாலும் இதைச் செய்யலாம்.

100 - 95 எம்.எம்.ஹெச்.ஜி!

அவசியம் இருக்க வேண்டியது, பல்ஸ் ஆக்சிமீட்டர். தற்போது, அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கிறது; 'பேட்டரி' உதவியுடன் இயங்கும் இந்த கருவியின் விலை, அனைவரும் வாங்கி பயன்படுத்தும் வகையில் உள்ளது.

இதை, 'ஆன்' செய்து, ஆள்காட்டி விரலில் பொருத்தினால், சில வினாடிகளில், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும், இதயத் துடிப்பு எண்ணிக்கையையும் காட்டி விடும்.

ஆக்சிஜன் அளவு, 95 - 100 எம்.எம்.ஹெச்.ஜி., அதாவது, பாதரச மானியில், 95 - 100 மி.மீ., என்ற அளவில் இருக்க வேண்டும். 95க்கு குறைவாக இருந்து, மூச்சு விட முடியாமல் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை.

பதற்றப்பட வேண்டாம்

நம் மனநிலை தான் உடலிலும் எதிரொலிக்கும். எனவே, அமைதி யாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

நுரையீரல்

மார்பு பகுதி முழுதும், 'ஸ்பாஞ்ச்' போன்று வியாபித்துள்ள நுரையீரலில், பெரும்பாலான காற்று பைகள், முதுகு பக்கத்தில் உள்ளன. தொற்று காரணமாக, நுரையீரலில் நீர் கோர்த்தால், மார்பின், பின் கீழ் பகுதியில் நீர் சேர்ந்து கொள்ளும்;

இது, முழுதும் கார்பன் டை ஆக்சைடாக இருக்கும்.

முதலில், நுரையீரலில் இருக்கும் தேவையற்ற காற்றை நீக்க, நுரையீரலில் உள்ள காற்று முழுவதையும் வெளியில் விட வேண்டும்.

வாய் வழியே மூச்சை வெளியே விட்டு, சில வினாடிகள் அப்படியே இருந்து, மூக்கு வழியே காற்றை உள்ளிழுத்து, சில வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும். மூச்சை வெளியில் விட மூன்று வினாடிகள், அதே நிலையில் இரண்டு வினாடிகள் உள்ளிழுக்கவும் அதே நேரம் இருக்க வேண்டும்.

இந்த பயிற்சி மிகவும் முக்கியம். இது, நுரையீரலில் திரவம் சேருவதை தடுக்கும்.

பலுான்

மலேஷியாவில் இருக்கும் டாக்டர் நண்பர் சொன்ன மூச்சுப் பயிற்சி இது. கொரோனா தொற்று ஏற்பட்ட என் நோயாளிகள் பலரையும் இதை செய்ய சொல்லியதில், நல்ல பலன் கிடைத்தது. அதிலும், காசநோய் தொற்று ஏற்பட்டு குணம் ஆனவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது, இது மிகவும் பலன் அளித்தது.

பெரிய அளவு பலுானை, ஒவ்வொரு முறையும், 5 வினாடிகள் என்ற அளவில், மூன்று முறை ஊத வேண்டும்.

ஒரு முறை ஊதியதும், அதே அளவு நேரம் மூச்சை உள்ளிழுத்து, வெளியில் விடுவதற்கு பதில், பலுானை ஊத வேண்டும்.

பலுான் ஊத முடியாதவர்கள், பாட்டிலில் நீர் எடுத்து, அதனுள், 'ஸ்டிரா' போட்டு, நீரில் குமிழ் வரும் விதமாக ஊதினாலும் பலன் உண்டு.

இந்த பயிற்சிகள் எல்லாம் உட்கார்ந்த நிலையில், ஒரு நாளைக்கு பல முறை செய்ய வேண்டும்.

படுக்கை

பெரும்பாலான காற்று பைகள், நுரையீரலின் பின் பகுதியில், அதாவது, நடு முதுகின் இரு பக்கத்திலும் இருப்பதால், தொற்று பாதிப்பு இருந்தால், மல்லாந்து படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். காரணம், நீண்ட நேரம் அப்படியே இருந்தால், நுரையீரலின் கீழ் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு, போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம்.

எனவே, குப்புற படுத்து உறங்குவது, நுரையீரல் செயல்பாடு சீராக இருக்க உதவும். இது போன்ற நேரத்தில், தலைக்கு மட்டும் தலையணை வைத்தால் சிரமமாக இருக்கும்; தலை முதல், வயிற்றுப் பகுதி வரை மெல்லிய, 'குஷன்' வைத்துக் கொள்ளலாம்.

கடந்த ஆறு மாதங்களில் கொரோனாவிடம் கற்றுக் கொண்ட பாடத்தை, நடைமுறையில் பின்பற்றி, நோய் எதிர்ப்பு சக்தி, மூச்சுப் பயிற்சி போன்ற சில அடிப்படையான விஷயங்களில் கவனமாக இருந்தாலே போதும்; வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

டாக்டர் சந்தியா ராமநாதன்,

பொது நல மருத்துவர்,

நியூசிலாந்து.







      Dinamalar
      Follow us