தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூட்டு வலிக்கு தீர்வு உண்டு

மூட்டு வலிக்கு தீர்வு உண்டு

மூட்டு வலிக்கு தீர்வு உண்டு


PUBLISHED ON : மார் 31, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* என் வயது 54. முழங்கால் மூட்டு தேய்மானம் அடைந்து வலியால் அவதிப்படுகிறேன். மருத்துவர் மூட்டு ஊசியை பரிந்துரைத்துள்ளார். இதனால் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா.

பொதுவாக மூட்டு ஊசிகள் STEROID மற்றும் HYALURONIC ACID என்கின்ற குழுமத்தைச் சார்ந்தவை. STEROID ஊசியானது மூட்டில் உள்ள வீக்கத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்தும். மூட்டு தேய்மானத்தின் அடிப்படை காரணமாக பழுதடைந்த ஜவ்வை சீரமைக்கும் சக்தி இதற்கு இல்லை.

இரண்டாவது வகையான HYALURONIC ACID மூட்டினில் உள்ள ஜவ்விற்கு ஒரு ஊட்டச்சத்து போல தற்காலிகமாக இயங்கும். ஆரம்ப கால மூட்டு தேய்மானத்திற்கு இவை இண்டும் குறுகிய காலம் மட்டும் பயன் தரலாம். மூட்டினில் தேய்மானம் தீவிரம் என்றால் இவை இரண்டுமே பலன் அளிக்காது. நீண்டகால தீர்வு என்பது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே.

* என் வயது 25. ஆறு மாதங்களுக்கு முன் கால்பந்து விளையாடும்போது நடந்த விபத்தில் முழங்கால் மூட்டினில் அடிபட்டது. மருத்துவரிடம் காண்பித்ததில் ஸகேன் எடுத்து பரிசோதித்தார். அதில் முழுங்கால் மூட்டின் மேற்பரப்பில் உள்ள ஜவ்வில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். தற்போது என் மூட்டினில் வலியும், மடக்கும்போது ஓசையும் கேட்கிறது. எனக்கு தீர்வு உண்டா.

மூட்டின் மேற்பரப்பில் உள்ள ஜவ்வுக்கு இயல்பாக மறுவளர்ச்சி அடையும் தன்மை கிடையாது. இவ்வாறு ஏற்படும் காயங்கள் மூட்டு தேய்மானத்திற்கு வழிவகுக்கும். சமீப காலத்தில் ஜவ்வினை மறுவளர்ச்சி செய்ய வைக்கும் சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

சில சிகிச்சைகள் நுண்துளை மூலமாகவும் செய்ய இயலும். இச்சிகிச்சை முறைகளின் வெற்றி விகிதம் சுமார் 65 முதல் 70 சதவீதம் ஆகும். நீங்கள் இளம் வயது என்பதால் கண்டிப்பாக இப்படிப்பட்ட சிகிச்சையை செய்துகொள்வது நல்லது.

-டாக்டர் கே.என்.சுப்ரமணியன்

மதுரை, 93442 46436

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us