கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - உஷ்ணத்தை குறைக்கும் அரிசி தண்ணீர்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - உஷ்ணத்தை குறைக்கும் அரிசி தண்ணீர்!
PUBLISHED ON : மார் 24, 2019

முகத்தில், அடிக்கடி ஏற்படும் பருக்கள், இளநரை, முடி உதிர்வது, வயிற்றில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரப்பது, தொண்டை வறட்சி, தோலில் அரிப்பு, நெஞ்செரிச்சல், வாய் புண் இது போன்ற பொதுவான பிரச்னைகளுக்கு காரணம், உடல் உஷ்ணம்.
உடல் வெப்பநிலையை சமன் செய்யவே, அதிகப்படியான வியர்வை ஏற்படுகிறது. எத்தனை வகையான லோஷன்கள், கிரீம்களை பயன்படுத்தினாலும், உடல் வெப்பத்தைக் குறைக்காத வரையில், இந்தப் பிரச்னைகள் தீராது.
இந்த கோடையில், உடல் உஷ்ணத்தை குறைக்க, ஐந்து எளிய வழிமுறைகள்:
* ஹைட்ரோ தெரபி - வாளியில் பாதியளவு சுத்தமான நீரை நிரப்பி, சில ஐஸ் துண்டுகளைப் போட வேணடும். சில துளிகள் ரோஜா இதழ் நீர் கலந்து, 15 நிமிடங்கள், பாதங்களை வைக்க வேண்டும். அவ்வப்போது, பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும். உடனடியாக, உடல் வெப்பம் குறைவதுடன், பாதங்களில் உள்ள நரம்புகள் துாண்டப்பட்டு, பதற்றம் குறைந்து, அமைதியாகும். துாங்குவதற்கு முன் இதைச் செய்தால், ஆழ்ந்த துாக்கம் கிடைக்கும்
* அரிசி தண்ணீர் - வயிற்றில் உள்ள எரிச்சல் நீங்க, ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டு உள்ளது. 10 கிராம் அரிசியை, ஒன்றிரண்டாக உடைத்து, 60 மில்லி தண்ணீரில், இரண்டு முதல் ஆறு மணி நேரம் வரை ஊற வைக்கவும். மண் பாத்திரத்தில் ஊற வைத்தால் இன்னும் நல்லது. இதை வடிகட்டி, உணவிற்கு, 30 நிமிடங்கள் முன், குடிக்கலாம். ஒரு நாளில் இரண்டு முறைக்கு மேல் குடிக்க வேண்டாம். வைட்டமின் - பி நிறைந்தது; வாய்ப்புண் உடனடியாக குணமாகும்.
* சித்தளி பிராணயாமம் - மெல்லிய பருத்தி துணியை விரித்து, சம்மணம் போட்டு, வசதியாக தரையில் அமர்ந்து கொள்ளவும். நாக்கை வெளியில் நீட்டி மடித்து, மூச்சை ஆழமாக இழுத்து. வாயை மூடி, மூக்கின் வழியே வெளியில் விடவும். இது போல, 8 முதல் 10 முறை செய்தால், உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் உடனடியாக சரியாகும்
* உணவு - மசாலா பொருட்கள், எண்ணெய், புளிப்பு சுவையுடைய உணவுகள், குளிர்ந்த நீர், உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். கசப்பு, இனிப்பு சுவைகள் உஷ்ணத்தைக் குறைக்கும். உலர் கொட்டைகளை அப்படியே சாப்பிடாமல், ஊற வைத்து, பயன்படுத்தலாம். நீர்ச் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர் குடிக்க வேண்டும்
* ஒரு நாளைக்கு குறைந்தது, 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்
* சந்தனம் - சந்தன துாளை, ரோஜா இதழ் நீருடன் கலந்து, பருக்கள் உள்ள இடங்கள், நெற்றியில் தடவி, காய்ந்தவுடன் கழுவலாம். கவனச் சிதறல்களைத் தடுக்கும்.
விவேக் மிட்டல், பிட்னெஸ் டிரைனர், மும்பை.
hallofittuber@gmail.com
