தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/பிரசவத்திற்கு பின் முதுகுவலி; இது தீர்வு

பிரசவத்திற்கு பின் முதுகுவலி; இது தீர்வு

பிரசவத்திற்கு பின் முதுகுவலி; இது தீர்வு


PUBLISHED ON : ஜூலை 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

பிரசவத்திற்கு பின், பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கு, மிக முக்கிய காரணம், பிரசவ காலத்தில் நிற்கின்ற போதும், நடக்கின்ற போதும், வயிற்றை முன் தள்ளிய நிலையில் பழகி விடுகின்றனர். பிரசவத்திற்கு பின்பும், அதே நிலை நீடிப்பதால், முதுகு எலும்பு மற்றும் எலும்பின் நடுவில் இருக்கும் மிருதுவான பகுதி பாதிப்புக்குள்ளாகிறது. அதேபோல், இப்போது வலியற்ற பிரசவத்திற்காகவும், சிசேரியன் செக்'ஷனுக்காகவும் முதுகுத்தண்டில் ஏற்றப்படும் ஊசிகளால், முதுகெலும்பு பல பின் விளைவுகளை சந்திக்கின்றது.

பெரும்பாலும் முதுகெலும்பை நேராக வைத்து அமர்வதற்கும், நடப்பதற்கும் பழகிக்கொண்டாலே, பல பிரச்னைகளை தவிர்க்கலாம். 'ஐசோமெட்ரிக்' பயிற்சிகள், குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது. சாதாரண உடற்பயிற்சிகளை விடவும், ஐசோமெட்ரிக் பயிற்சிகள் மிகச்சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால், இன்றும் பாடி பில்டர்கள், தங்கள் உடலை வலுவாக்க இப்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

டேபிள் டாப் நிலை: நேராக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி, 90 டிகிரி அளவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் முதுகெலும்பை, சற்று கவனத்தில் கொண்டு வந்து பாருங்கள். அதில் லேசான வளைவு கண்டிப்பாக இருக்கும். இப்போது வளைவுடன் இருக்கும் முதுகெலும்பை, முடிந்த அளவு நேராக்கி, சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இரண்டாவது நிலைபெல்விக் ப்ரிட்ஜிங்: கால்களை மடக்கி வைத்துக்கொண்டு, இடுப்பு பகுதியை மட்டும், முடிந்த அளவு உயர்த்தி, அதே நிலையில், 30 வினாடிகள் இருக்க வேண்டும்.

பைலேட்ஸ் கிரன்ச்: கால்களை, 90 டிகிரியளவில் மடக்கி வைத்துக்கொண்டு, உடலை மேல் நோக்கி, முடிந்த அளவு கொண்டு வந்து, 30 செகண்ட்கள் இருக்க வேண்டும். குப்பற படுத்துக்கொண்டு இருகால்களையும் ஒன்றாக்கி, முட்டியை மடக்காமல், எவ்வளவு தூரம் மேல் நோக்கி தூக்க முடியுமோ, அவ்வளவு தூரம் மேல் தூக்கி நிறுத்த வேண்டும்.

பிரன்ட் ப்ரிட்ஜிங்: குப்புற படுத்த நிலையில், கைகளை ஊன்றி உடலை மட்டும் மேல் நோக்கி, கொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம், 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். இப்பயிற்சியின் போது, முதுகெலும்பு நேராக இருத்தல் அவசியம்.

ஏர் பிளானிங்: வலது காலையும், இடது கையையும் தரையில் ஊன்றிக்கொண்டு, முதுகெலும்பை வளைக்காது, உடலை நேராக்குங்கள். இந்த நிலையை, 'சூப்பர்மேன் போஸ்' என்றும், 'ஏர் பிளானிங்' என்றும் கூறுவர்.

குறிப்பு: இந்த பயிற்சிகள் அனைத்தையும், ஒரு நல்ல பிசியோதெரபிஸ்டின் மேற்பார்வையில், கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால், முதுகுவலிக்கு கண்டிப்பாக 'குட் பை' சொல்லலாம். எந்த பயிற்சியையும், தொடர்ந்து செய்து வருவதன் மூலமே, பலன் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us