தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/ஆரோக்கியமாக வாழ என்ன சாப்பிடணும்

ஆரோக்கியமாக வாழ என்ன சாப்பிடணும்

ஆரோக்கியமாக வாழ என்ன சாப்பிடணும்


PUBLISHED ON : ஜூலை 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு, சத்தான உணவு அவசியம். ஆனால், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த இரண்டாம் வகையினர் தான், பல வியாதிகளையும், உடல் பருமனையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, உலகம் முழுவதும், 100 கோடி பேர், அளவுக்கதிகமான எடையுடையோர்; 40 கோடி பேர் மிக அதிக எடையுடையோர்; 30 கோடி பேர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர். தமிழகத்தில், சென்னையில் மட்டும், 49 சதவீதம் பேர் அளவுக்கு அதிகமான எடையுடையோர். பெரும்பாலான நோய்களுக்கு காரண கர்த்தாவாக அமையும், இந்த உடற் பருமனால், ரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த அழுத்த நோய், மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு, கணைய நோய், பால் உணர்வில் நாட்டமின்மை, போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

தேவை சரிவிகித உணவு: உணவின் ருசி கருதி, தனக்குப் பிடித்த உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து, பல உணவுகளை கலந்து, உண்ண பழகிக் கொள்ள வேண்டும். புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து என, சரிவிகித உணவே சிறந்தது. அதோடு, உட்கொள்ளும் உணவுப் பொருளின் கலோரியையும், (வெப்ப வெளிப்பாட்டுத் திறன்) கணக்கிட தெரிந்து கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: போதைப் பொருட்களான மது, புகைபிடித்தல், குட்கா வகைகள், போதை மருந்து போன்றவற்றை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகள், ஐஸ்கிரீம், சாக்லேட், செயற்கை குளிர்பான வகைகள் போன்றவற்றை, தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதில், பிரிசர்வேட்டர் போன்ற, வேதிப் பொருட்கள், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். வனஸ்பதி போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளையும், வெள்ளை மைதா போன்ற மிக சுத்திகரிக்கப்பட்ட உணவுகளையும், குறைத்துக்கொள்வது நல்லது. ஒரே எண்ணெயை, பல முறை உபயோகப்படுத்தக் கூடாது. ஏனெனில், சமையல் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை:

1) முழுமையடையாத கொழுப்பு

2) முழுமையடைந்த கொழுப்பு

இதில், முதல்வகை கொழுப்பில், அதிக தீங்குகள் இல்லை. இவை, ரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள, 'லினோலிக் ஆசிட்' கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது. 2ம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் ரத்தக் குழாயில் படிந்து, பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு, சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் பிளவர் போன்ற சமையல்

எண்ணெய்களை பயன்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us