PUBLISHED ON : மே 12, 2019

கர்ப்பமாக இருந்தபோது, என் உடல் எடை, 23 கிலோ அதிகரித்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், சாப்பிட வேண்டும் என்று தோன்றியதை எல்லாம் சாப்பிட்டேன். எனக்குள்ளே ஒரு உயிர் வளர்கிறது, என்ற பரவச உணர்வு;
குழந்தைக்கு எல்லா ஊட்டச் சத்துக்களும் கிடைக்க வேண்டும், விரும்பியதை சாப்பிட்ட பொழுது, என் மனமும் மகிழ்ச்சியாக இருந்தது.
தாய்மை என்பது, பெண்ணிற்குக் இயற்கை கொடுத்த எத்தனை அற்புத மான விஷயம் என்பதை, ஒவ்வொரு வினாடியும் அனுபவித்தேன்.
இப்பொழுது, என் மகனுக்கு ஐந்து மாதங்கள் ஆகிறது. தாய்ப்பால் கொடுக்கும் இந்த காலகட்டத்தில், அதீத பசி இருக்கிறது.
அதற்காக, பிரசவ காலத்தில் சாப்பிட்டதைப் போல, நினைத்ததை எல்லாம் சாப்பிடாமல், கொழுப்பு, மாவுச் சத்து இல்லாத, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுகிறேன்.
பிரசவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை, டென்னிஸ் விளையாடினேன். இப்பொழுதும், தினமும் ஒரு மணி நேரம் தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறேன். சத்தான உணவு, உடற்பயிற்சியால், 23 கிலோ உடல் எடையை எளிதாக குறைத்து விட்டேன்.
சானியா மிர்சா மாலிக் டென்னிஸ் ஆட்டக்காரர்,
ஐதராபாத்.