தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இதுதான் சளிக்கு காரணமா...

இதுதான் சளிக்கு காரணமா...

இதுதான் சளிக்கு காரணமா...


PUBLISHED ON : டிச 15, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* என் மகன் வயது மூன்று. இரவில் துாங்கும்போது குறட்டை விடுகிறான். இச்சிறுவயதில் குறட்டை வருமா. இதற்கு தீர்வு உண்டா?

சிறு குழந்தைகள் குறட்டை விடுவது டான்சில், அடினாய்டு என்னும் உறுப்புகள் அதிகமாக மூச்சுக்குழாயை அடைப்பதனால் ஏற்படுகிறது. சிறு வயதிலேயே இப்பாதிப்பு ஏற்படுவதால் காது, மூக்கு, தொண்டை பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெறலாம். கவனிக்க தவறினால் மேலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

* எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும். ஆஸ்துமாவும் உள்ளது. அதனால் எனது பாட்டி, பால், தயிர் போன்றவற்றை தவிர்க்க சொல்கிறார்கள். இது சரியா?

உணவினால் வரும் அலர்ஜி 5 சதவீதம் தான். ஒருவருக்கு பால், தயிர் போன்றவற்றை உண்ணும் போது இருமலோ, மூச்சுத் திணறலோ ஏற்பட்டால் அவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். பசுவின் பாலை விட பாதாம் பால் சேர்ப்பது நல்லது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக சளிப்பிடிக்காமல் இருக்க தவிர்க்க வேண்டியது குளிர்ச்சியான உணவு, பானங்களை தான். தயிர், பால் போன்றவற்றை அல்ல.

* ஏ.ஆர்.டி.எஸ்., பாதிப்பிற்கு தனி சிகிச்சை உள்ளதா? இதை சரி செய்வது எப்படி?

ஒருவருக்கு எவ்வித நோய் பாதிப்பு வந்தாலும் ஏ.ஆர்.டி.எஸ்., என்னும் நிலைக்கு செல்ல நேரிடலாம். இப்பாதிப்பு வரும் போது மூச்சுத்திணறல் ஏற்படும். சில நேரங்களில் வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய தேவையும் ஏற்படலாம். ஆனால் இப்பாதிப்பிற்கென தனியாக நுரையீரல் மருத்துவம் செய்ய தேவை இல்லை. எந்த நோயினால் ஏ.ஆர்.டி.எஸ்., நிலை ஏற்பட்டதோ, அதற்கு சிகிச்சை அளித்தாலே போதுமானது. உதாரணத்திற்கு தீக்காயத்தால் இப்பாதிப்பு வந்தால், அதற்கு தான் மருத்துவம் பார்க்க வேண்டும். பின்னர் ஏ.ஆர்.டி.எஸ்., தானாகவே சரியாகிவிடும்.

* நவீன ஆம்புலன்ஸ் என்கிறார்களே. அது என்ன?

நவீன ஆம்புலன்ஸ் என்பது வெண்டிலேட்டர் போன்ற நவீன கருவிகள் வசதியுடன் கூடியது. வெண்டிலேட்டர் வசதி தேவைப்படும் ஒருவரை அக்கருவி இல்லாத ஆம்புலன்சிற்கு மாற்ற முடியாது. இக்கருவி அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் பொருத்துவது நல்லது. கருவிகள் மட்டும் போதுமானதல்ல. அனுபவமுள்ள செவிலியர்களின் கவனிப்பும் அவசியம்.

- டாக்டர் மா.பழனியப்பன்

நுரையீரல் சிறப்பு நிபுணர்

மதுரை. 94425 24147

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us