தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நுரையீரலில் மாசு படிந்தால்....

நுரையீரலில் மாசு படிந்தால்....

நுரையீரலில் மாசு படிந்தால்....


PUBLISHED ON : டிச 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* உடலுக்கு நுரையீரல் முக்கியம் ஏன்

மனிதன் உடலில் அனைத்து உறுப்புகள் இயக்கத்திலும் முக்கிய பங்கு வகிப்பது நுரையீரல் தான். அது மனிதனின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை சீராக கொண்டு சேர்க்கும் பணியை செய்கிறது. சிறுநீரகம், இருதயம், மூளை, கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கு ரத்தத்தை சீராக கொண்டு செல்கிறது.



* மனித வாழ்க்கையில் சுவாசத்தின் பங்கு..

ஒரு மனிதன் பிறக்கும் போது சுவாசம் தான் முக்கிய காரணமாக உள்ளது. சுவாசம் நின்று போனால் மனிதன் இறக்கிறான். சுவாசத்தில் பிரச்னைகள் வராமல் பாதுகாத்துக்கொள்ள

வேண்டும்.



* நுரையீரல் பாதிப்பிற்கு காரணம்

சுவாசத்திற்கு ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. காற்றில் மாசு ஏற்படும் போது, மனிதன் அதனை சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், செங்கல் சூளை, கட்டுமான பணிகள், சிமென்ட் ஆலை, விறகுகளை பயன்படுத்துதல் போன்ற காற்றை மாசுபடுத்தும் அனைத்தும் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்றில்கலந்துள்ளமாசுடன் சுவாசிக்கும் போது, நுரையீரலில் அந்த மாசு படிந்து பாதிப்பு ஏற்படுகிறது.

தொழிற்சாலை பகுதிகளில்குடியிருப்புகள் கட்ட கூடாது.

* இந்தியாவில் நுரையீரல் நோய் பாதிப்பு எந்த அளவில் உள்ளது.

உலக அளவில் நாள்பட்ட நுரையீரல் நோய் பாதிப்பில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.

சராசரியாக நுாறு பேரில்நாள் ஒன்றுக்கு10 முதல் 15 பேர் வரைநுரையீரல் நோயால்

பாதிக்கப்படுகின்றனர்.

* கடற்கரையோர பகுதிகளில் நுரையீரல் பாதிப்பு ஏற்படுமா

கடல் காற்றில் உள்ள வேதிப்பொருள் நுரையீரலை பாதிக்கும் தன்மை கொண்டது.நமது

வீடுகளில் வளர்க்கப்படும் புறா, லவ்பேர்ட்ஸ்,சிகரெட் புகைத்தல் போன்றவைகளாலும்

நுரையீரல்பாதிக்கப்படும் வாய்ப்புஉள்ளது.

* பாதிப்பை எப்படி அறிந்து கொள்ள முடியும்

சுவாசத்தில் பிரச்னைகள் ஏற்படும் போது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வரும்.

காற்றில் சிலிக்கோசிஸ் என்ற பொருளால் பாதிப்புஏற்படுகிறது. ஆஸ்துமா,காச நோய்

போன்றவைஉருவாகும். ஆரம்பகட்டத்திலேயே டாக்டர்களை அணுக வேண்டும்.

* காற்றில் எந்த அளவு மாசு உள்ளது.

பொதுவாக நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் கண்ணுக்கு தெரியாத துாசி, துகள்கள் கலந்திருக்கும். 50 முதல் 100க்குள் இருந்தால் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. நுாறுக்கு மேல் தாண்டினால் பாதிக்கும். சுவாசத்தின் போது இந்த துகள்கள் நுரையீரலை சுற்றி வந்து கொண்டே இருக்கும். நோய் பாதிப்பு வரும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நுரையீரலை முற்றிலுமாக பாதித்து விடும்.



* நுரையீரல் நோய்களில் இருந்து பாதுகாப்பது எப்படி

சுற்றுச்சூழல் மாசடையக்கூடாது. வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். சைக்கிள் பயணம், நடை பயணம் மேற்கொள்வது நல்ல பலன்களை தரும். காற்று மாசு உள்ள இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் பயன்படுத்தலாம்

டாக்டர் ஜே.ஜாவித் அப்துல்லா



நுரையீரல் சிகிச்சை நிபுணர்



ராமநாதபுரம்

89251 72947

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us