தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கரும்புள்ளிகள் நீங்க இதுதான் வழி

கரும்புள்ளிகள் நீங்க இதுதான் வழி

கரும்புள்ளிகள் நீங்க இதுதான் வழி


PUBLISHED ON : ஏப் 05, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில், 15 நிமிடம் தேய்த்த பின், காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

வெந்தயக் கீரையை, நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும், கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்தமல்லியுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, காயவைத்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும், இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

ஓட்ஸை பவுடர் செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.

தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us