PUBLISHED ON : ஏப் 05, 2015
கோடை வெயிலை சமாளிக்க தினமும், 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை பழங்களை சாப்பிடலாம். மோர், இளநீர் பருகலாம். உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகமுள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். தர்பூசணி, தக்காளி, எலுமிச்சை பழச்சாறுகளை குடிக்கலாம். வெய்யிலில் போக வேண்டுமென்றால், அரை மணி நேரம் முன்பு சன்ஸ்கிரீன் லோஷன்களை தடவி செல்லலாம்.
கையில் எப்போதும் கைப்பையில் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்துக் கொள்வது அவசியம். எப்போதும் குடை அல்லது கூலிங் கிளாஸ் இருப்பது நல்லது. கூடுமான வரையில் வெளியில் செல்லும் வேலைகளை மாலையில் வைத்துக் கொள்வது நல்லது. டின் ஜூஸ்களை விட, வீட்டில் பிரெஷாக தயாரித்த பழச்சாறுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. ஐஸ், குளிர்பானங்களை தவிர்க்கலாம். பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. 3 வேளையும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. காபி, ஐஸ் டீ போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.
அதிக புரோட்டீன், குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பது நல்லது. உடலில் தண்ணீர் அளவை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், உடலுக்கு தேவையற்ற கலோரிகளை மட்டுமே கொடுக்கிறது. அதனால் வேறு பயன்கள் எதுவும் இல்லை. நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம். தண்ணீர் தாகம் தீர வெள்ளரிப்பிஞ்சு சிறந்த பலனை தரும். இதில்,
93 சதவீதம் நீர்ச்சத்து மிகுந்துள்ளது. வெள்ளரியில் சோடியம் அதிகளவு உள்ளது. உடலில் இருந்து வெளியேறும் நீர்சத்தை ஈடுசெய்யும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. கோடையில் வெளியே சுற்றுவதால் ஏற்படும் சரும பாதிப்புக்கு வெள்ளரி சாறு நல்ல தீர்வு. வெள்ளரி சாற்றை முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
