PUBLISHED ON : மார் 31, 2015

மரத்திற்கு வேர்கள் பலமாக இருப்பது போல், மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உடலுக்கு தேவையான வைட்டமின் இயற்கையாக கிடைத்தால் மட்டுமே, ஆரோக்கியமாக இருக்க முடியும். இயற்கையாக வைட்டமின்கள் நிறைந்துள்ள சத்தான உணவு தான், பீட்ருட் - முசுமுசுக்கை பரோட்டா.
பீட்ருட் - முசுமுசுக்கை பரோட்டா
செய்வது எப்படி?
தேவையானவை
கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, முசுமுசுக்கை கீரை 1/2 கிண்ணம்
பீட்ரூட் 1 சிறியது
மிளகு தூள், இஞ்சி, பூண்டு சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
செய்முறை
பீட்ரூட்டை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கவுனி அரிசி மாவு மற்றும் கோதுமை மாவுடன் அரைத்து வைத்துள்ள பீட்ருட், சுத்தம் செய்து வைத்துள்ள கீரை, மிளகு தூள், இஞ்சி, பூண்டு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து, கைகளால் சிறு சிறு சப்பாத்திகள் போல் தட்டி, தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுத்தால், கமகமக்கும் பீட்ரூட் - முசுமுசுக்கை பரோட்டா தயார்.
பலன்கள்
முசுமுசுக்கை கீரை, உடலிலுள்ள இறந்த செல்களை உயிர்ப்பிக்கும். எச்.டி.எல்., எனும் நல்ல கொழுப்பை உடலில் அதிகரிக்க செய்யும். கவுனி அரிசியில் எல்லா வகையான வைட்டமின் சத்துகள் மற்றும் இரும்பு சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் தாதுஉப்புகளும் உள்ளன. இதய நோய் வராமல் தடுக்கும்.
- லீலாவதி சீனிவாசன்
சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
