தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கலப்படங்களை கண்டுபிடிக்க...

கலப்படங்களை கண்டுபிடிக்க...

கலப்படங்களை கண்டுபிடிக்க...


PUBLISHED ON : அக் 15, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

வர்ணம் சேர்க்க மரத் தூளையோ, செங்கற் பொடியையோ, மிளகாய் தூளில் கலந்து விடுகின்றனர். சிறிது மிளகாய்த் தூளை எடுத்து எரிக்க வேண்டும். அதில், சாம்பல் இருந்தால் கலப்படமானது.



நாம் உண்ணும் உணவில், 22 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

என்னதான் பரிசோதிக்கப்பட்டு அரசாங்க முத்திரை குத்தப்பட்டாலும், கலப்படத்தைத் தடுக்க முடிவதில்லை. இதற்காக, நாம் வாங்கும் உணவுப் பொருட்களை, ரசாயனப் பரிசோதனைக் கூடத்துக்கா, ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு மாதமும் கொண்டு செல்ல முடியும்?

நாமே அவற்றைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். இதற்கு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம், டிங்க்சர் அயோடின், வெள்ளை பிளாட்டிங் பேப்பர் ஆகியவையே போதுமானது.



நெய் அல்லது வெண்ணெயில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருப்பின், வெண்ணெய் அல்லது உருக்கிய நெய் ஒரு தேக்கரண்டி எடுத்து, அதில் ஒரு சிட்டிகை சர்க்கரையையும், ஐந்து துளி ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் சேர்க்கவும். வனஸ்பதி கலக்கப்பட்டிருந்தால், அமிலம் ரோஸ் அல்லது சிவப்பு நிறமாக மாறும்.

வெண்ணெய், நெய்யில் சிறிதளவு எடுத்து டிங்க்சர் அயோடினை சில துளிகள் அதனுடன் கலந்தால், கலப்படமிருப்பின் கலவை வயலட் நிறமாக மாறும். வெண்ணெயிலோ, நெய்யிலோ கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளலாம்.

வர்ணம் சேர்க்க மரத் தூளையோ, செங்கற் பொடியையோ, மிளகாய் தூளில் கலந்து விடுகின்றனர். சிறிது மிளகாய்த் தூளை எடுத்து எரிக்க வேண்டும். அதில், சாம்பல் இருந்தால் கலப்படமானது.



காபித் தூளில் புளியங்கொட்டையின் தோல்களையும் சேர்த்து அரைத்து கலப்படம் செய்கின்றனர். ஒரு குவளை தண்ணீரில் சிறிதளவு காபித் தூளைப் போட்டால் சுத்தமானது நீரில் மிதக்கும். புளியங்கொட்டைத் தோல் குவளையின் அடியில் படியும். இதேபோல், சர்க்கரையில் ரவை கலப்படம் செய்வதையும் கண்டறியலாம். இத்தகைய பொருட்களை ஆகாரங்களில் சேர்த்து உட்கொள்வதானால், சில அபாயகரமான நோய்க்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதற்கு, சகோதரிகள் தாங்களே சிரமம் பாராது, மசாலா பொடிகளையும் மற்றும் தேவையானவற்றையும் தயாரித்துக் கொள்ளலாம். இதனால், ஆரோக்கியத்தைக் காப்பாற்றி, ஆபத்தை தவிர்க்கலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us