தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை

மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை

மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை


PUBLISHED ON : நவ 14, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாரடைப்புக்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதையடுத்து, செயல்முறை மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இரண்டு வகைப்படும். 1) ஆன்ஜியோ பிளாஸ்டி 2) பைபாஸ் அறுவை சிகிச்சை.



ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது என்ன?

ஆன்ஜியோகிராம் செய்வது போலவே இருதய ரத்தக்குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, அதன் வழியாக எளிதாக அடைப்பை சரிசெய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை அல்ல. மயக்க மருந்தும் தேவையில்லை.



ஆன்ஜியோ பிளாஸ்டி எவ்வாறு செய்யப்படுகிறது?

ஆன்ஜியோகிராம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயைவிட சற்று தடித்த, அகலமான, எளிதில் வளையும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் டியூப் (Guide Catheter) தேர்ந்தெடுக்கப்படுகிறது.

வலது கையின் மணிக்கட்டிலோ, தொடைகளின் மேல்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வழியாகவோ இந்த டியூப் செலுத்தப்பட்டு, அதன் நுனிப்பகுதி பாதிக்கப்பட்ட அல்லது அடைப்பு உள்ள இதய ரத்தக் குழாயின் ஆரம்ப பகுதியில் நிறுத்தப்படுகிறது. அடுத்து மிக எளிதில் வளைந்து செல்லும் தன்மையை நுனிப்பகுதியாக கொண்ட நீண்ட மெல்லிய இழை (Guide Wire) கைடு டியூபின் வழியாக அடைப்பு உள்ள ரத்தக் குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதற்கு 'வழிகாட்டி இழை' என்று பெயர்.  இந்த வழிகாட்டி இழையின் மூலம் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பின் தன்மைக்கு ஏதுவான சுருக்கப்பட்ட பலூன் எடுத்துச் செல்லப்பட்டு, அடைப்பு உள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறது. இப்போது அந்த பலூனை விரிவடையச் செய்வதன் மூலம், அடைப்பின் பெரும்பகுதி ரத்தக்குழாயின் தசை சுவர்களுக்குள் அழுத்தப்படுகிறது. ரத்தக்குழாயின் வழி அகலப்படுத்தப்படுகிறது. அதன் பின் பலூன் மீண்டும் சுருக்கப்பட்டு ரத்தக்குழாயில் இருந்து வெளியே எடுத்து வரப்படுகிறது. இச்செய்முறையால் அடைப்பால் பாதிக்கப்பட்ட இருதய தசைக்கு ரத்த ஓட்டம் மீண்டும் சீராக்கப்படுகிறது. அகலப்படுத்தப்பட்ட ரத்தக்குழாய் மீண்டும் சுருங்கி அடைபடாமல் தடுக்க, மெல்லிய, விரியும் தன்மை கொண்ட, பால்பாயின்ட் பேனாவில் உள்ள ஸ்பிரிங் போன்ற 'உலோக வலை' (Stent) அவ்விடத்தில் பொருத்தப்படுகிறது.



இந்த உலோக வலை இரு வகைப்படும். 1. சாதாரண உலோக வலை (Bare Metal Stent), 2. மருந்து தடவப்பட்ட உலோக வலை (Drug Eluting Stent).



மருந்து தடவப்பட்ட உலோகவலை சில காரணங்களால் சாதாரண உலோக வலையைவிட சிறப்பானது. ஆனால் விலை அதிகமானது. எல்லாருக்கும் மருந்து தடவப்பட்ட உலோக வலை தான் பொருத்தப்பட வேண்டும் என்பதில்லை.  இதய ரத்தக்குழாயின் அடைபட்ட பகுதியின் அளவு, சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற சில காரணங்களைக் கருத்தில் கொண்டு எத்தகைய உலோக வலை பொருத்த வேண்டும் என மருத்துவரே தீர்மானிப்பார். மாரடைப்பு வந்து மூன்றில் இருந்து எட்டு மணி நேரத்திற்குள், மருத்துவமனை வருவோருக்கு ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்து தராமலேயே இத்தகைய சிகிச்சை முறை மேற்கொள்வதே மிகச்சிறந்ததாகும். மேலும் சிலவகை மாரடைப்புக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து தரமுடியாது. அத்தகைய சூழலில் ஆன்ஜியோ பிளாஸ்டி போன்ற இத்தகைய சிகிச்சை முறை தான் உகந்ததாக இருக்கும்.

இந்த சிகிச்சைக்கு பின் இரண்டாவது நாளில் எழுந்து நடமாடலாம். நான்கு அல்லது ஐந்து நாட்களில் வீடு திரும்பலாம்.



 - டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா, மதுரை.

தொடர்புக்கு: 99447-94093.


 



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us