தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/உடல் வழிபாட்டுக்கு தும்பை

உடல் வழிபாட்டுக்கு தும்பை

உடல் வழிபாட்டுக்கு தும்பை


PUBLISHED ON : பிப் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடவுள் வழிபாட்டுக்கு, தும்பை பூக்கள், அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. காலையில், புதிய பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத் தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகிறது. முருகக் கடவுளுக்கு, தும்பை மலர்களால் அர்ச்சனை செய்யப்படுவதுண்டு.

பெரும்பாலும், மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை, அதிகம் வளர்கிறது. விவசாய நிலங்களில், இந்த செடி, மழை காலங்களில் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. தும்பை இலை, பூக்கள் மருத்துவப் பயன் அதிகமானவை.

பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீண்டிருக்கும். தும்பை பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 15 துளிகள் அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி, தாகம், அசதி தீரும். கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாக தும்பை இலைகளை அரைத்து, மேல் பூச்சாகப் பூச வேண்டும். தொடர்ந்து, 5 நாட்கள் இதை செய்யலாம்.

தும்பை பூவையும், பெருங்காயத்தையும் அரைத்துக், கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து, சொட்டு மருந்தாகக் காதுக்குள் விட்டு வர, சீழ்வடிதல் குணமாகும். தும்பை பூவை, வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டி, பாலை மட்டும், காலை, வெறும் வயிற்றில் தொடர்ந்து, நாற்பது நாட்கள் அருந்தி வர, கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

ஒற்றை தலைவலியா?

தும்பை பூவையும், மிளகையும் அரைத்து, நெற்றியில் பற்றுப் போட, தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும். தும்பைச்சாறு, 500 மி.லி., தேங்காய் எண்ணெய் 500 மி.லி., இரண்டையும் கலந்து காய்ச்சி, வெளி பிரயோகமாகப் பயன்படுத்த, வெட்டுக் காயம், ஆறாத ரணங்கள் ஆறும்.

தும்பை மற்றும் துத்தி இலை சாறு சிறிதளவு எடுத்து, பசும் பாலில் கலந்து கொடுத்து வர, உள் மூலம், புற மூலம், ரத்த மூலம் தீரும். ஒமத்தை அரைத்து தும்பை இலை சாறு கூட்டித் தர, மாந்தம், மாந்தக் கழிச்சல், வயிற்றுப் பொருமல் நீங்கும். தும்பைப் பூ, இலை, திப்பிலி சூரணம் இவற்றுடன், அக்கரகாரம் கலந்து தேனில் குழைத்து தரத், தொண்டை சதை வளர்ச்சி கட்டுப்படும். தும்பபை பூவை, பசும்பால் விட்டு அரைத்து, எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலை முழுகி வர, தலைபாரம், ஒற்றை தலைவலி, மூக்கடைப்பு, நீரேற்றம் நீங்கும்.

சளியை போக்கும்

உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும். சளி பிடித்தால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள், தும்பை இலையின் சாற்றில் தேன் கலந்து அருந்தினால் சளி தொல்லையிலிருந்து விடுபடலாம். மலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில், ரசாயனம் கலந்த உணவுகளை உண்பதாலும், அதிக மன அழுத்தத்தாலும், மலச்சிக்கல் ஏற்படுகிறது. இவர்கள் தும்பை இலையை நன்கு அலசி, அதனுடன் புதினா, கொத்துமல்லி கலந்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வாயுவை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லையிலிருந்து விடுபட, தும்பை இலையின் சாறை, தொடர்ந்து 3 நாட்கள் காலையில் அருந்திவர குணம் தெரியும். தும்பை இலையை நன்றாக கசக்கி தலையின் பொட்டுகளிலும், நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் தடவி வந்தால் தலைவலி குணமாகும். பித்தத்தை குறைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us