PUBLISHED ON : ஆக 07, 2024

முப்பது சதவீதம் தம்பதிக்கு. குழந்தையின்மைக்கான காரணம் என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத நிலைமை இருப்பதாக கூறப்படுகிறது.
70 சதவீம் பேருக்கு கருத்தரிக்க முடியாததற்கு இதுதான் காரணம் என்று தெரியும்.
ஸ்கேன் பரிசோதனைகள் எல்லாம் நார்மல் ஆக உள்ளது. ஹெச்டிசி டெஸ்ட் செய்து கருக்குழாய்கள் இயல்பாக உள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கை, கருமுட்டையின் ஆரோக்கியம் என்று அனைத்தும் இயல்பாக இருந்தும், கரு தரிப்பதில் சிக்கல் என்ற நிலையில்தான், 'அன் எக்ஸ்பெக்டேட் இன்பெர்ட்டிலிட்டி' என்று சொல்கிறோம்.
இதை மைக்ரோ ஸ்கோபிக் நிலையில் ஏதோ பிரச்னை உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு தீர்வாக இருப்பது தான் 'இன் விட்ரோ பெர்டிலைசேஷன்' எனப்படும் புறகருக்கட்டல் அதாவது, ஐவிஎப் முறை. இயற்கையான வழிமுறைகள் பயனற்றதாக இருக்கும் போது, கருத்தரிப்பதை சுலபமாக்குவதற்காக இதில் படிப்படியாக பல நிலைகள் இடம்பெறுகின்றன.
01. கருப்பையைத் துாண்டுதல்: ஒரு மாதத்தில் ஒரே ஒரு முட்டை மட்டும் வழக்கமாக முதிர்ச்சியடைகிற இயற்கையான மாதவிடாய் சுழற்சிக்கு மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்ட கருமுட்டைகளை உருவாக்க கருப்பையை தூண்டுவது.
1014 நாட்கள் இடைவெளியில், வழங்கப்படும் ஹார்மோன் மருந்துகள், ஒரே நேரத்தில் பல கரு முட்டைகளை முதிர்ச்சியடையச் செய்கின்றன.
02. கருமுட்டை மீட்பு: முதிர்ச்சியடைந்த கருமுட்டைகளை அறுவைசிகிச்சை மூலம் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, யோனி சுவர் வழியாக, 'அல்ட்ராசவுண்டு இமேஜிங்' வழியாக மெல்லிய ஊசி வழியாக உட்செலுத்தப்படுகிறது.
03. விந்து சேகரிப்பு மற்றும்தயாரிப்பு: இதே சமயத்தில், பெண்ணின் கணவனிடமிருந்து, முடியாத பட்சத்தில் தானமாக பெற்ற விந்தணுசேகரிக்கப்படுகிறது.
இதிலிருந்து ஆரோக்கியமான, நகர்வுத்திறன் கொண்ட விந்து ஆய்வகத்தில் பிரித்தெடுக்கப்பட்டு, கருவூட்டல் செய்வதற்காக தயார் செய்யப்படுகிறது.
04. கருக்கூட்டல்: கருமுட்டையும்விந்தணுவும் சோதனைக் கூடத்தில் ஒன்று சேர்க்கப்படுகின்றன. இதற்கு இரண்டு முதன்மையான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன:
முதலாவது, மரபுசார்ந்த ஐவிஎப்: இயற்கையான முறையில் கருக்வூட்டல் நிகழ்வதை உறுதி செய்ய கல்ச்சர் எனப்படும் நுண்ணுயிரியை வளர்த்து, சோதனைக் குழாயில் கருமுட்டைகளும், விந்தணுவும் ஒன்றாக சேர்த்து வைக்கப்படுகின்றன.
அடுத்தது, 'இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக்' விந்து ஊசி. கருவூட்டலை சாத்தியமாக்க ஒவ்வொரு முதிர்ச்சியடைந்த கருமுட்டைகளுக்குள்ளும் ஒரு ஒற்றை விந்தணுவை நேரடியாக செலுத்துவது.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை இருக்கும் போது, இந்த முறை பயனள்ளதாக இருக்கும்.
05. கரு வளர்ப்பு: கருக்கட்டலை தொடர்ந்து, ஆய்வகத்திற்குள் ஒரு சிறப்பு இன்குபேட்டரில் அடைகாக்கும் பெட்டிக்குள் கருக்கள் வளர்க்கப்படுகின்றன. கர்ப்பப்பையில் இருக்கும் அதே சூழ்நிலைகளை போலவே இன்குபெட்டர் இருக்கும்.
06. ஆரோக்கியமாக வளர்ந்த ஒன்று, இரண்டு கரு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்படும்.
07. கருப்பதியம், கருத்தரிப்பும் வெற்றிகரமாக நிகழ்ந்திருக்கிறதா என்று உறுதி செய்ய, கர்ப்பப்பைக்குள் செயற்கை கருவை வைத்த இரண்டு வாரங்களில், இதற்கென்று பிரத்யேகமாக உள்ள பரிசோதனை செய்து உறுதி செய்யப்படும்.