sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/உத்தித பத்மாசனம்

உத்தித பத்மாசனம்

உத்தித பத்மாசனம்


PUBLISHED ON : டிச 30, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் விளக்கம்: உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இப்பெயர் பெற்றது.

செய்முறை:

1. விரிப்பில் பத்மாசனத்தில் அமர வேண்டும்

2. உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும்

3. இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே, புட்டப்பகுதியை முழங்கை வரை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்

4. இந்நிலையில் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்

5. சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், ஆசனத்தை விலக்கி சாதாரண நிலைக்கு வந்து, பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

கால அளவு: நான்கு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும், 30 வினாடி முதல், 45 வினாடிகள் வரை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு: வலுவிழந்த மணிக்கட்டு உடையவர்கள் தவிர்க்க வேண்டும்.

பயன்கள்:

1. தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன

2. ஜீரண சக்தி நன்கு கிடைக்கிறது

3. குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படுகிறது

4. உடல் எடை குறைகிறது

5. கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கிறது.

- ரா.சுதாகர், திருமூலர்

பிரபஞ்ச யோகா மையம்,

சென்னை.

97909 11053

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us