PUBLISHED ON : ஜூலை 24, 2022

அ நிறம் | அளவு
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை நம் நாடு உட்பட பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும், ஆர்.என்.ஏ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுப்பு மருந்தை கண்டறிந்து, இன்று அது வெற்றிகரமானதாக உள்ளது. இந்த தடுப்பூசி போடுவதால், உடலில் உள்ள புரதம், நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி, கொரோனா வைரசை அழிக்கிறது.
இதே தொழில்நுட்பத்தில், உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க, 'இம்மினோ தெரபி' எனப்படும் கேன்சர் சிகிச்சையில் ஒரு முறைக்கு பயன்படுத்தி உள்ளனர். சில வகை கேன்சர் மூன்றாம், நான்காம் நிலையில் உள்ள போது, வழக்கமான சிகிச்சை 2 சதவீதம் மட்டுமே பலன் தந்தது. ஆனால், ஆர்.என்.ஏ., தொழில்நுட்பம் 50 சதவீதம் பலன் தருவதாகவும் கூறப்படுகிறது.
மேயோ கிளினிக், அமெரிக்கா.
