PUBLISHED ON : ஜூலை 24, 2022

இங்கிலாந்தில், மூன்று லட்சத்தில் 50 ஆயிரம் பேர் தினமும் மூன்று காபி அல்லது டீ குடித்தனர். அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். காலையில் எழுந்ததும் காபி, டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் இவர்களை ஒப்பிட்டு, பல காலமாக ஆராய்ச்சி நடந்தது.
இதில், தினமும் அதிகபட்சம் மூன்று கப் காபி அல்லது டீ குடிப்பவர்களுக்கு, பக்கவாதம் வரும் வாய்ப்பு 28 சதவீதமும் 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் வரும் வாய்ப்பு 32 சதவீதமும் குறைவாக இருந்தது தெரிந்தது.
ஏற்கனவே பக்கவாதம் வந்து சிரமப்படுபவர்களுக்கு, இதே போல தினமும் மூன்று கப் காபி கொடுத்ததில், காபியில் உள்ள 'கேபைன்' என்ற வேதிப் பொருள், ரத்த நாளங்கள் பலவீனமாவதைத் தடுத்து, அதனால் ஏற்படும் டிமென்ஷியாவையும் வராமல் தடுத்தது தெரிய வந்துள்ளது.
பக்கவாதம் வந்தவர்களில், 40 சதவீதம் பேருக்கு ரத்த நாள பாதிப்பால் டிமென்ஷியா வருவது, 40 சதவீதம் பொதுவான விஷயம்.
-வேர்ல்டு ஆப் மெடிசின்
