தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சுற்றுச்சூழல் மாசாலும் வைரஸ் தொற்று வரலாம்!

சுற்றுச்சூழல் மாசாலும் வைரஸ் தொற்று வரலாம்!

சுற்றுச்சூழல் மாசாலும் வைரஸ் தொற்று வரலாம்!


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்திற்கு மாறும் போது, பருவநிலை தாக்கத்தால், பொதுவாக வரும் பிரச்னை, வைரஸ் தொற்று. இதனால், முதலில் பாதிக்கப்படுவது சுவாச மண்டலம்.

குழந்தைகள், வயதானவர்கள், கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஆஸ்துமா பாதிப்பு, நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களை, வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கும்.

சுற்றுச்சூழல் மாசு அதிகம் இருப்பதும் வைரஸ் தொற்றுக்கு காரணம். வைரஸ் தொற்றால் இருமல், சளி, தொண்டை வலி, கண் எரிச்சல், கண்கள் சிவந்து போவது போன்ற அறிகுறிகள் வரலாம்.

எச்சிலுடன் சேர்த்து ரத்தம் வரும். ரத்தத்தைப் பார்த்ததும் பதற்றம் ஏற்படும். இது, தீவிரத் தொற்றின் ஒரு அறிகுறி. சுவாசப் பாதையில் உள்ள, 'மியுக்கஸ்' எனப்படும் சவ்வில் ஏற்பட்ட தீவிர தொற்றால் ரத்தம் வரும்.

வைரஸ் தொற்று ஏற்பட்டால், பயப்படத் தேவையில்லை; பெரும்பாலானவை தானாகவே சரியாகி விடும். மூன்று நாட்களுக்குள் சரியாகாமல் அறிகுறிகள் அதிகரிப்பது, ஆஸ்துமா போன்ற உடல் பிரச்னை இருப்பவர்களுக்கு சளியுடன் ரத்தம் வருவது ஆகியவை, இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றாக இருக்கலாம் என்பதால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

- உலக சுகாதார மையம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us