கம்பீரமான ஓர் போர் வீரனுக்குரிய தோற்றத்தை இந்த ஆசனம் ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது.
செய்முறை
விரிப்பில் நேராக நின்று, வலது காலை உடம்பிற்கு முன்னே மூன்று அடி தூரத்தில் வைக்க வேண்டும்.
மெதுவாக வலது காலை மடக்கி, இரண்டு கைகளையும் மூச்சை இழுத்தபடி மேலே உயர்த்தி, முதுகையும், கழுத்தையும்
பின்னால் வளைக்க வேண்டும்.
இந்நிலையில் தலைப்பகுதி இரண்டு கைகளுக்கு இடையில் இருக்க வேண்டும்; முழங்கையை
மடக்கக் கூடாது.
இப்போது மூச்சை சீராக இழுத்து விட வேண்டும். பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டபடியே, கைகளை விலக்கி பிறகு கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
கால அளவு:
ஒவ்வொரு கால்களிலும் மூன்று
முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும், ௨௦ முதல், ௩௦ வினாடிகள் செய்யலாம். இதற்கு மாற்று ஆசனமாக பாதஹஸ்தாசனம் செய்யலாம்.
பலன்கள்:
முட்டிப்பகுதி வலுவடைந்து தொடைப்பகுதி நன்றாக தூண்டப்பட்டு கால்களுக்கு நன்கு
ரத்த ஓட்டம் பாய்கிறது.
ஓட்டப்பந்தய வீரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் ஆசனம் இது.
நெஞ்சுப் பகுதி நன்கு விரிவடைந்து சுவாச மண்டலம் நன்கு வேலை செய்கிறது.
சரி, இருமல் தொல்லையிலிருந்து காக்கிறது.
- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053

