தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அசைவத்தை விட்ட விராட் கோலி!

அசைவத்தை விட்ட விராட் கோலி!

அசைவத்தை விட்ட விராட் கோலி!


PUBLISHED ON : பிப் 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



கடந்த 2018லிருந்து சுத்த சைவமாக மாறிவிட்டேன். அப்போது, போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருந்தேன். அந்த சமயத்தில் எலும்பு தேய்மானத்தால், கழுத்துப் பகுதி பாதிக்கப்பட்டு, 'ஸ்பான்டிலைட்டிஸ்'' பிரச்னை இருந்தது. 'டெஸ்ட்' போட்டிகளில் விளையாடிய போது, என் கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு, 'டிஸ்க்' வீங்கி, அதன் கீழ் உள்ள நரம்பை அழுத்தியது.

இதனால் ஏற்பட்ட வலி, வலது கையில் சுண்டு விரலுக்கு செல்லும் நரம்பை அழுத்தியதால், தாங்க முடியாத வலியில் அவதிப்பட்டேன்.

கை விரலில், ஒருவித கூச்ச உணர்வும் இருந்ததால், இரவில் ஒரு நிமிடம் கூட நிம்மதியாக துாங்க முடியவில்லை.

டாக்டரின் ஆலோசனைப்படி, அவர் பரிந்துரைத்த பரிசோதனைகளைச் செய்ததில், என் வயிற்றில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரப்பதும், உடலில் அளவுக்கு அதிகமாக யூரிக் அமிலம் சுரப்பதும் தெரிந்தது. இதற்கான காரணம் என்ன என்று டாக்டர் விளக்கினார்:

தினசரி தேவைக்காக கால்சியம், மெக்னீசியம் மாத்திரை எடுத்துக் கொள்வேன். நான் செய்யும் உடற்பயிற்சிக்கு தினசரி சாப்பிடும் ஒரு மாத்திரை போதவில்லை. தேவைப்படும் அதிகப்படியான கால்சியத்தை, என் செரிமான மண்டலம், எலும்புகளில் இருந்து எடுப்பதால், எலும்பு தேய்மானம் ஏற்பட்டு, இப்பிரச்னை வந்துள்ளது.

அசைவ உணவு சாப்பிடும் போது, இயல்பாகவே அதிகப்படியான, 'ஹைட்ரோ குளோரிக், யூரிக்' அமிலங்கள் சுரக்கும் என்பதால், அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us