ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் அதிகம் விளையக் கூடியது பிளம்ஸ் பழங்கள். சுற்றுலா செல்பவர்கள், கட்டாயமாக இப்பழத்தை வாங்காமல் ஊர் திரும்ப மாட்டார்கள்.
வைட்டமின்'ஏ' சத்து உள்ளதால், ரத்தத்தை விருத்தி செய்து, சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும். சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.
எளிதில் ஜீரணமாகும் நார்ச் சத்துக்கள் உள்ளன. நார்ப்பொருட்கள், ஜீரண மண்டலத்தை நன்கு செயல்பட வைத்து, மலச்சிக்கல்
வராமல் பார்த்துக் கொள்ளும். இதிலுள்ள வைட்டமின் சி, மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது.
உடலை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதில், வைட்டமின் சி'யின் பங்கு முக்கியமானது. வைட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது. பொட்டாசியம், புளோரைடு, இரும்பு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் மிகுதியாக உள்ளன. பொட்டாசியம், உடலை மென்மையாக வைத்திருப்பதுடன், ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பங்கெடுக்கிறது.
பி -காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான, நியாசின், வைட்டமின் பி 6, பான்டோ தெனிக் ஆசிட் போன்றவை உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு போன்றவற்றின் வளர்சிதை மாற்றத்தில், இந்த வைட்டமின்கள் துணைக் காரணியாக பங்காற்றுகிறது.
பிளம்ஸ் பழத்தில் சிறிதளவு வைட்டமின் கே உள்ளதால், ரத்தம் உறைதலில் உதவுவதுடன், அல்சீமர் போன்ற பாதிப்புகளை குறைப்பதிலும் அதிகமாக பயன்படுகிறது.