தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வைரஸ் தொற்று... பாதுகாப்பு எஸ்.எம்.எஸ்.,

வைரஸ் தொற்று... பாதுகாப்பு எஸ்.எம்.எஸ்.,

வைரஸ் தொற்று... பாதுகாப்பு எஸ்.எம்.எஸ்.,


PUBLISHED ON : ஜூன் 04, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி, எஸ்.எம்.எஸ்., தான். உடனேயே, 'வாட்ஸ் ஆப்' தகவல், சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் செய்தி என்று நினைக்க வேண்டாம்; அவற்றை நம்பவும் கூடாது. நான் சொல்வது, உயிரை காக்கும் எஸ்.எம்.எஸ்.!

முதலில், 'எஸ்' என்பது 'சோஷியல் டிஸ்டன்ஸ்' - அதாவது தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது. அடுத்து, 'எம்' என்பது 'மாஸ்க்' - முக கவசம் அணிந்து கொள்வது. கடைசியில், 'எஸ்' என்பது சானிடைசிங்; கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுதல். இந்த மூன்றும், வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாப்பது.

தொற்று காலத்தில், வெளியில் செல்லக்கூடாது. அவசியம் தேவைக்கு சென்றால், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். நமக்கும், அடுத்த நபருக்கும் நடுவில் 6 அடி இடைவெளி அவசியம். இவற்றை பின்பற்றாத சிலர் என்னிடம், 'நோய் வந்தாலும் எங்களுக்கு எதுவும் பண்ணாது டாக்டர்...' என்கின்றனர்.

நமக்கு ஒன்றும் செய்யாமல் இருந்தாலும், நம்மிடம் இருக்கும் தொற்று, குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, நம்மிடம் இருந்து நோய் பரவினால், உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இரண்டாவது 'எம்'

கொரோனா பாசிட்டிவ் நோயாளிகள், 'முக கவசம் போட்டேன், எப்படி வந்தது' என்று கேட்கின்றனர். வாய்க்கு கீழே, கழுத்துக்கு முக கவசத்தை போடுவதால், எந்த பயனும் இல்லை. வாய் மற்றும் மூக்கை நன்கு மூடும்படி அணிவது தான் பாதுகாப்பு.

இப்படி அணிவது மூச்சை அடைக்கிறது என்று சொல்பவர்களுக்கு, பழகினால் சரியாகி விடும். நாங்கள் முழு நேரமும் நோயாளிகளை பார்ப்பதால், 'என் 95' முக கவசம் அணிந்து இருக்கிறோம். மூச்சு அடைக்கிறது என்று சரியாக முக கவசம் போடாவிட்டால், ஆபத்தாகி விடும்.

இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், இரண்டடுக்கு முக கவசம் அணிவது நல்லது. முக கவசத்தின் முன் பகுதியை கையால் தொடவே கூடாது. காதில் மாட்டியதை கழற்றி, பாதுகாப்பாக மற்றவருக்கு தொற்று பரவாத வகையில் அகற்ற வேண்டும்.

மூன்றாவது 'எஸ்'

வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும், சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். விரல் இடுக்குகளில், முன் பக்கம், பின் பக்கம் என்று, 30 வினாடிகள் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த மூன்றும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் பின்பற்ற வேண்டிய தரக் கட்டுப்பாடுகள்!

டாக்டர் என்.வெங்கடேஷ்,

அரசு மருத்துவ அலுவலர்,

கும்பகோணம்,

94882 07667

uppilimathur6@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us