தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆக்சிஜன் அளவை அதிகரிக்க என்ன செய்யலாம்?

ஆக்சிஜன் அளவை அதிகரிக்க என்ன செய்யலாம்?

ஆக்சிஜன் அளவை அதிகரிக்க என்ன செய்யலாம்?


PUBLISHED ON : ஜூன் 06, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இன்ப்ரா ரெட்' எனப்படும் புற சிவப்பு கதிர்களை கொண்டு ஆக்சிஜன் அளவை கணக்கிடும் கருவி பல்ஸ் ஆக்சி மீட்டர். கட்டை விரல் அல்லது ஆள் காட்டி விரலில் மாட்டி, ஆக்சிஜன் அளவை பார்க்க வேண்டும். நெயில் பாலிஷ், மருதாணி இருக்கும் விரல்களில் மாட்டி அளவை பார்த்தால், சரியான மதிப்பீடு வராது; இது போன்ற நிலையில், கால் விரல் அல்லது காது மடல்களில் பார்க்கலாம்.

ஆக்சிஜன் அளவு 97 - 100 சதவீதம் இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை; வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை அவசியம் பெற வேண்டும். தினமும் குறிப்பிட்ட இடைவெளியில், மூன்று முறை ஆக்சிஜன் அளவை பார்க்க வேண்டும். 98 சதவீதத்திற்கும் கீழ் இருந்தால், டாக்டரின் நேரடி ஆலோசனை அவசியம்.

சிலருக்கு நான்கைந்து நாட்கள் கழித்து, ஆக்சிஜன் குறைய வாய்ப்பு உள்ளது. 90 சதவீதத்திற்கும் கீழ், அவசர சிகிச்சைக்கான நிலை. உடனடியாக ஆக்சிஜன் தர வேண்டும்..

முதலுதவி

இடைப்பட்ட நேரத்தில், முதலுதவியாக, குழந்தையின் முதுகில் லேசாக தட்டுவது போல தட்டுவது, குப்புறப் படுப்பது, ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.

ஆவி பிடித்தல்

மூக்கடைப்பு இருந்தால் ஆவி பிடிக்கலாம்; ஆனால், நுரையீரல் தொற்றை எந்தவிதத்திலும் இது சரி செய்யாது.

வீட்டில் இருக்கும் கொரோனா நோயாளிகள், சர்க்கரை கோளாறு, ரத்த அழுத்தம் இவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். சர்க்கரை கோளாறு இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்; எனவே, தொற்றின் தன்மை தீவிரமாக வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசி

இன்றைய சிக்கலான நிலையில் நமக்கு கிடைத்துள்ள வரப் பிரசாதம் தடுப்பூசிகள். 18 வயதிற்கு மேல், மூன்றாவது அலை வைரஸ் பரவலுக்கு முன், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.

அலர்ஜி இருப்பவர்கள், கர்ப்பிணி தவிர மற்றவர்கள் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் தருபவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது.

முதல் டோஸ் போட்ட நேரத்தில், தீவிர அலர்ஜி இருந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி அடுத்த டோஸ் எடுத்துக் கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி தவிர வேறு தடுப்பூசி போட வேண்டிய தேவை இருப்பவர்கள், குறிப்பிட்ட அந்த தடுப்பூசி போட்ட, 28 நாட்கள் கழித்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கொரோனா நோயாளிகள், பாதிப்பு சரியான, 4 - 8 வாரங்கள் கழித்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ரத்தம் உறையும் பிரச்னை இருந்து, அதற்கான மருந்து சாப்பிட்டால், டாக்டரின் கண்காணிப்பில் பாதுகாப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.

நோயே வராதா?

'சீட் பெல்ட்' போட்டாலும், சாலை விதிகளை பின்பற்றினால் தான் உயிருக்கு உத்தரவாதம். தடுப்பூசி போட்டாலும், கடைப்பிடிக்க வேண்டியது முக கவசம், கை கழுவுதல், சமூக இடைவெளி என்ற எஸ்.எம்.எஸ்., விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அப்போது தான் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. லேசான, மிதமான அறிகுறிகளுடன் தொற்று குணமாகி விடும்.

டாக்டர் என். வெங்கடேஷ்,

அரசு மருத்துவ அதிகாரி, கும்பகோணம்.

94882 07667

uppilimathur6@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us