'விட்டமின் - டி, ஒமேகா -- 3' உடற்பயிற்சி... கேன்சர் வராது!
'விட்டமின் - டி, ஒமேகா -- 3' உடற்பயிற்சி... கேன்சர் வராது!
PUBLISHED ON : ஜூலை 03, 2022

'விட்டமின் - டி' குறைபாடு உலகம் முழுதும் உள்ள பிரச்னை. நோய் எதிர்ப்பு சக்திக்கு, விட்டமின் மிகவும் அவசியம்.
தினமும், 'விட்டமின் - டி, ஒமேகா - 3' உள்ள மீன் எண்ணெய் மாத்திரை, மாத்திரையுடன், எலும்புகளை வலுப்படுத்த வாரம் மூன்று நாட்கள் எளிமையான உடற்பயிற்சி செய்தால், 60 சதவீதத்திற்கும் மேல் கேன்சர் அபாயம் குறைகிறது. குறிப்பாக, 60 வயதிற்கு மேல் இதை அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும்.இந்த ஆய்வில் பங்கேற்றவர்களை எட்டு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினருக்கு, விட்டமின் - டி, ஒமேகா - 3, உடற்பயிற்சி மூன்றும் தினமும் தரப்பட்டது. மற்ற குழுவினருக்கு ஏதாவது இரண்டு அல்லது ஒன்று மட்டும் தந்து, மூன்று வாரத்திற்கு ஒரு முறை என, 12 மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.
மற்றவர்களை ஒப்பிடும் போது, மூன்றையும் பெற்றவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு, 61 சதவீதம் குறைந்திருந்தது உறுதியானது.
- பிரான்டியர்ஸ் இன் ஏஜிங், சுவிட்சர்லாந்து
