sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

குழந்தைகளை பாதிக்கும் வாக்கிங் நிமோனியா

/

குழந்தைகளை பாதிக்கும் வாக்கிங் நிமோனியா

குழந்தைகளை பாதிக்கும் வாக்கிங் நிமோனியா

குழந்தைகளை பாதிக்கும் வாக்கிங் நிமோனியா


PUBLISHED ON : ஜன 19, 2025

Google News

PUBLISHED ON : ஜன 19, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வாக்கிங் நிமோனியா' என்பது மைக்கோபிளாஸ்மா, கிளமிடியா போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் நுரையீரல் தொற்று. வழக்கமான நிமோனியாவை போல் இல்லாமல், இதன் அறிகுறிகள் சற்று வேறுபடும். எனவே, மருத்துவ ஆலோசனை பெற்றால் போதுமானது.

வழக்கமான நிமோனியாவை போன்று இல்லாமல் லேசான காய்ச்சல், தொடர்ச்சியாக இருமல், வறண்ட இருமல், உடல் சோர்வு ஏற்படும். மிதமான அறிகுறிகள் என்பதால் பெரும்பாலும் அலட்சியம் செய்து விடுகிறோம். இது தவறு. இத்தொற்று பாக்டீரியாவால் ஏற்படுவதால், காய்ச்சலுக்கு தரப்படும் பாராசிட்டமால், இருமல் மருந்துகளுடன் ஆன்டி பயாடிக் மருந்துகள் தேவைப்படலாம். சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகள் தொந்தரவு செய்தால் நெபுலைசேஷன் சிகிச்சையும் தேவைப்படலாம்.

டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டு வீட்டில் ஓய்வு எடுத்தால் போதும். 5 - 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இளம் வயதினரையே அதிகம் இது பாதிக்கும் என்பதால், தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் அறிகுறிகள் குறையாமல் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். முதியவர்களை பாதிப்பது மிகவும் குறைவு.

பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போது, இருமும் போது, பேசும் போது வெளிப்படும் அவரின் நீர்த்துளிகள் மூலம் மற்றவர்களுக்கு சுலபமாக பரவும். மிதமான அறிகுறிகளாக இருந்தாலும், பொது இடங்களுக்கு செல்வதால் எளிதாக மற்றவர்களுக்கு பரவலாம். நோய் குணமாகும் வரை இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்இது ஆபத்தான நோயல்ல. அறிகுறிகளை கண்டறிந்து, அவை தீவிரமடைந்தாலோ, தொடர்ந்து இருந்தாலோ மருத்துவ ஆலோசனையை பெறுவது முக்கியம். குழந்தைகளுக்கு வாக்கிங் நிமோனியா பாதிப்பு தொடர்ந்து இருப்பதால், பெற்றோர் கவனமாக இருப்பது அவசியம்.

டாக்டர் பத்மா சுஷ்மா,

குழந்தைகள் நல மருத்துவர், தீபம் மருத்துவமனை, சென்னை97904 97905feedback@deepamhospitals.com






      Dinamalar
      Follow us