தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூட்டு வலியை குறைக்கும் நடைப்பயிற்சி

மூட்டு வலியை குறைக்கும் நடைப்பயிற்சி

மூட்டு வலியை குறைக்கும் நடைப்பயிற்சி


PUBLISHED ON : ஜன 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆறு மாதங்களுக்கு முன் என் முழங்காலுக்கு 'ஏ.சி.எல். ரிகன்ஸ்ட்ரக்ஷன் சர்ஜரி' மேற்கொண்டேன். இன்னும் என்னால் முழங்காலை முழுதாக நீட்ட முடிவதில்லை. மடக்கவும் முடியவதில்லை. இதற்கு என்ன செய்வது?

தற்போது ஏ.சி.எல்., ரிகன்ஸ்ட்ரக்ஷன் சர்ஜரி நுண் துளை சிகிச்சையாக செய்யப்படுகிறது. 'ஹாம்ஸ்டிரிங்' எனும் தசை நாரை வைத்து பாதிக்கப்பட்ட 'ஏ.சி.எல்.' இணைப்பு நாரை சீர் செய்யப்படும். சாதாரணமாக நான்கு வாரங்களில் நன்றாக நீட்டி மடக்க முடியும். அறுவை சிகிச்சைக்கு முன் உங்கள் மூட்டினில் இருந்த அசைவின் அளவு அறுவை சிகிச்சையின் போது கடைப் பிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் எடுத்து கொண்ட பிசியோதெரபி ஆகியவை உங்கள் மூட்டின் அசைவின் அளவை நிர்ணயிக்கும். இதை மனதில் கொண்டு நீங்கள் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

* என்னுடைய சகோதரி உடல் பருமனாக இருக்கிறாள். மூன்று ஆண்டுகளாக மூட்டு வலி நீங்காமல் அவதிப்படுகிறார். மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் தற்காலிகமாக வலி நிவாரணம் அளிக்கிறது. நடக்கவே முடிவதில்லை. என்ன செய்வது?

உடல் பருமனாக இருக்கிறவர்களுக்கு பழுதடைந்த மூட்டினில் அதிகமாக விசைகள் செல்கிறது. அப்படி செல்லும்போது மூட்டு தேய்மானம் அதிகமாகிறது. உடல் பருமனை கணிப்பதற்கு 'பாடி மாஸ் இன்டக்ஸ்' என்பது ஒரு அளவு கோலாக பயன்படுத்தப்படுகிறது. பி.எம்.ஐ., சராசரியாக 20-25 அளவு இருக்க வேண்டும். உங்கள் பி.எம்.ஐ., அதிகமாக இருந்தால் அதை குறைத்து சரியான நிலைக்கு கொண்டு வந்தால் கண்டிப்பாக மூட்டினில் உள்ள வலி குறையும். உடல் எடை என்பது உட்கொள்ளும் உணவு வகைகள் மற்றும் செய்யும் உடற்பயிற்சியை சார்ந்தது.

சரியான உணவு எடுத்து கொண்டு 30 நிமிடங்கள் வியர்வை சிந்தும் வரை உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடை குறையும். இப்படி உடற்பயிற்சி செய்தும் மூட்டு வலி குறையவில்லை எனில் மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொண்டால் நீண்ட கால வலி நிவாரணம் கிடைக்கும்.

- டாக்டர் கே.என்.சுப்பிரமணியன்,

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை.

93442 46436


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us