PUBLISHED ON : ஜன 06, 2019

உலகம் முழுவதிலும் சவாலாகி வரும் பிரச்னை, உடல் பருமன். மற்ற உடல் பிரச்னைகளைக் காட்டிலும், உடல் பருமன் பற்றிய சந்தேகங்களும் கேள்விகளும் அதிகம். இதில் வருத்தமான விஷயம், உடல் பருமன் குறித்து தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம், அதற்கான தீர்வுகளை பின்பற்றுவதில் இல்லை என்பதே.
அதிலும், குழந்தைகள் விஷயத்தில், மக்கள் அலட்சியமாக இருப்பதாகவே டாக்டர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். எவ்வளவு சொன்னாலும், புரிந்து கொள்வதில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.
காலையில், பிரட், ஜாம், பிஸ்கட், கேக், மதியம் பொரித்த, வறுத்த உணவுகள், மாலை பள்ளி விட்டு வந்ததும், இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகி, வெளியில் சென்றால், பிட்சா, பர்கர்; வீடியோ கேம், இதுதான் பெரும்பாலான குழந்தைகளின் வழக்கமாகி விட்டது.
டாக்டர் பி.எஸ்.அரவிந்த் ராஜா
குழந்தைகள் நல மருத்துவர், சென்னை.
90037 52040
