தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/ஞாபக சக்திக்கு வால்நட்

ஞாபக சக்திக்கு வால்நட்

ஞாபக சக்திக்கு வால்நட்


PUBLISHED ON : நவ 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலுக்கு தேவையான நல்ல சத்துக்கள், காய்கறிகள், பழங்களில் மட்டும் அல்ல... நட்ஸ் வகைகளிலும் ஏராளமாக உள்ளன. பாதாம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை ஆகியவற்றில், அற்புத சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வால்நட், உடலுக்கு நன்மை தரும் அரிய சத்துக்கள் உள்ளன.

சிக்கிம், நேபாளம், இமாலயப்பகுதிகளில் வளரும் அக்ரூட் வகை மரங்களில் இருந்து கிடைக்கும் கொட்டைகளே வால்நட் எனப்படுகிறது. இதிலுள்ள ஆல்பா லியோலெனிக் அமிலம், உயிரணுக்களை பெருக்குகிறது. மேலும் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும் தன்மை கொண்டவை. மூளையை அமைதிப்படுத்துவதோடு, டிமென்ஷியா என்ற ஞாபக சக்தி குறைவு நோயையும் வரவிடாமல் தடுக்கிறது.

இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ளன. இதனால், கெட்ட கொழுப்பை உடலில் குறைத்து நல்ல கொழுப்பை அளிக்கிறது. மேலும் இதை பாலில் கொடுக்க வைத்து அருந்தினால், கண் சம்பந்தப்பட்டவியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது என்றும், பாரம்பரிய வைத்திய முறைகள் தெரிவிக்கின்றன. மூளையின் அமைப்பை கொண்டுள்ள இந்த பருப்பு, மூளைக்கு பலம் சேர்த்து, மூளைச்சோர்வை நீக்கி நினைவாற்றலை அதிகரிக்கும்.

இதில், நிறைவுறா கொழுப்பு அமிலம், வைட்டமின் ஈ ஆண்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை உள்ளன. உடலுக்கு தேவையான மிக முக்கியமான மினரல் அனைத்தும், இதிலுள்ளன. மன அழுத்தம் உள்ளவர்கள், வால்நட்டை சாப்பிட்டால் மன அழுத்தம், உடல் சோர்வு நீங்கும்.

ரத்தத்தை சுத்தப்படுத்தி, மூளைக்க கடத்தும் ஆற்றல் வால்நட்டில் உள்ளது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடென்ட், இருதய நோய்கள் வராமல் தடுக்கும். தினமும் சாப்பிட்டால் இதயம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் காக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அல்சைமர் நோய் வராமல் பாதுகாப்பதில், வால் நட்டுக்கு பெரும்பங்கு உண்டு. அதேபோல் புற்றநோய் வராமல் தடுக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கும் வால்நட் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து, கொலஸ்ட்ரால் சம்பந்தமான நோய்கள் எதுவும் நெருங்குவதில்லை. வால்நட்டில் அதிகளவு நிறைவுறைா கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், கொழுப்பை குறைத்து, உடலை இளைக்கச் செய்கிறது. உடல் உறுப்புகளுக்கும் பலன் அளிக்கிறத. துரிதமாய் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி, கழிவுகளை வெளியேற்றுகிறது. உடல் பருமனானவர்கள் தொடர்ந்து, இதை உட்கொண்டு வந்தால், உடல் எடை குறையும்.

நட்ஸ் நல்லது என்பதை கேள்விபட்டு, ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக உண்பதும், பின் ஒரே மாதத்துக்கு சாப்பிடாமல் இருப்பதும் நல்லதல்ல. தினமும், 20 கிராம் அளவுக்கு சீரான நட்ஸ் சாப்பிடுவதே சிறந்தது என்கின்றனர், உணவியல் நிபுணர்கள்.

ஒரே நட்ஸ் வகையை மட்டும், 20 கிராம் சாப்பிடாமல், நட்ஸ் கலவையாக சேர்ந்து 20 கிராம் தினமும் சாப்பிட்டு வந்தால், ஊட்டச்சத்து சரி விகிதமாக கிடைக்கும். சாப்பிடும்போதும், சாப்பிட்டு முடித்தவுடனும், சாப்பாட்டுக்கு முன்னரும் நட்ஸ் சாப்பிட வேண்டாம். ஒரு உணடு வேளைக்கும், அடுத்த உணவு வேளைக்கு இடையில், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்கு பின்பும், அடுத்த உணவு வேளைக்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்பும் நட்ஸ் சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us