தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூலத்தை விரட்டும் துத்தி இலைத்தோசை!

மூலத்தை விரட்டும் துத்தி இலைத்தோசை!

மூலத்தை விரட்டும் துத்தி இலைத்தோசை!


PUBLISHED ON : நவ 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதர்களுக்கு எந்த நோய் வந்தாலும், உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் அது சங்கடத்தையே தரும். எனவே, ஆரோக்கியமான உடல்நலனையே அனைவரும் விரும்புவர். நமது முன்னோர் தற்போது உள்ள நவீன மருத்துவமோ, மருந்துகளோ இல்லாத நிலையிலும் கூட ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்ந்தனர்.

அதற்கு காரணங்களில் ஒன்ற, கடுமையான உடல் உழைப்பு, மற்றொன்று ஆரோக்கியமான இயற்கை சார்ந்த உணவு முறை. ஆதிமனிதர்கள் மருந்தே உணவாகவும், உணவே மருந்தாகவும் தான் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். தங்கள் வீடுகள் அருகிலேயே செடிகள், கொடிகள், அனைத்தின் மருத்துவ மற்றும் மூலிகை குணங்களை அறிந்து அவற்றை காலக்கிரமத்தில், உணவோடு சேர்த்து பயன்படுத்தி வந்தவர். அதிலொன்று தான் காட்டுக்கீரைகளை கண்டறிந்தது. அதில் வெட்டுக்கீரை, தும்பை, குப்பை மேனி, துத்தி, அகத்தி, வல்லாரை என்று அநேகம் உண்டு.

துத்தக்கீரையானது மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நவீன மருத்துவத்தில் மூலநோயை குணமாக்க, ஒரே வழி அறுவைசிகிச்சை தான் என்கின்றனர் அலோபதியில். ஆனால் மூல நோய் கிருமிகளை வயிற்றிலேயே அழிப்பதற்கு துத்தி இலைகளை அரைத்து, தினமும் காலையில் 7 நாட்களுக்கு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருந்தி வந்தால், எளிதில் குணமாகும். பின்னர் வாழ்நாளில், அந்த மனிதனை மூலநோய் அண்டவே அண்டாது.

துத்திக்கீரை: இக்கீரை எளிதில் எங்கும் கிடைக்கக்கூடியது. இதயத்தின் வடிவத்தில் இருக்கும். அதன் பச்சை இலைகளை சேகரிப்பது மட்டுமே நமது பணியாகும். அதாவது, துத்தி இலைகளை 200 கிராம் சேகரித்து, 100 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு, துவரம்பருப்பு 3 சிட்டிகை கலந்து, மிளகுத்தூள் அரை சிட்டிகை, சீரகம் ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் 3 சிட்டிகை சீரகம் ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் 3 சிட்டிகை கலந்து எளிதில் செய்யலாம்.

செய்முறை: முதலில் துத்திக்கீரையை பொடிப் பொடியாக நறுக்கி, சிறிய வெங்காயத்தை அரிந்து அதில் போட்டு வைத்துக் கொள்ளவும். முதலில் நல்லெண்ணெய் சீரகத்தை வாணலியில் போட்டு சூடாக்க வேண்டும். பின்னர் அதில் கீரை, வெங்காயத்தை போட்டு தேவையான நீரூற்றி வேகவைக்கவும். பி்ன்னர் அதை வாணலியில் போட்டு நன்றாக வதக்கி, துவரை, மிளகுத்தூள் மற்றும் உப்பைத் தூவி இறக்கவும். இதனுடன், நெய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய் அண்டாது.

துத்திக்கீரை தோசை: நகர்புற மனிதர்களுக்கு பச்சையாக துத்தி இலைகளை அரைத்து கஷாயம்போல் குடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால், அதனை தோசையாக்கி உண்ணலாம் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். நரம்புகளை நீக்கிய துத்தி இலைகளை எடுத்து, அதனை கரைத்த மாவுடன் கலந்து, தோசையாகச் சுடலாம். ஆனால் தோசையாக சாப்பிடும்போது சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். துத்தி இலைத்தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் போதுமானது. அவ்வாறு சாப்பிட்டு வந்தால், மூலநோய் குணமடையும். சிறுநீர் எரிச்சல், செரிமானக் கோளாறு போன்றவையும் சரியாகும். உடலின் தசைகளும் பலமடையும் என்கின்றனர், இயற்கை மருத்துவர்கள். எனவே காட்டுக்கீரையிலும் காணக்கிடைக்காத மருத்துவ குணங்கள் இதில் ஏராளமுண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us