தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'யு டியூப்' பார்த்து சமையல் செய்யலாம் - உடற்பயிற்சி கூடாது!

'யு டியூப்' பார்த்து சமையல் செய்யலாம் - உடற்பயிற்சி கூடாது!

'யு டியூப்' பார்த்து சமையல் செய்யலாம் - உடற்பயிற்சி கூடாது!


PUBLISHED ON : டிச 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இதைச் செய்தேன்... நார்மல் டெலிவரி ஆனது... அந்தப் பயிற்சி செய்தேன் நார்மல் டெலிவரியில் குழந்தை பிறந்தது' என்று பலரும் சமூக வலைதள வீடியோக்களில் சொல்வதைக் கேட்டு, தாங்களும் அதை செய்ய முயற்சிப்பது, கர்ப்பிணியர் செய்யும் மிகப்பெரிய தவறு.

படிக்கட்டுகளில் பலமுறை ஏறி இறங்குவது, கீழே அமர்ந்து தரையை துடைப்பது, இந்தியன் டாய்லெட் நிலையில் ஒரு நாளைக்கு 50 முறை உட்கார்ந்து எழுவது என, பலவற்றை செய்கின்றனர்.

'இதையெல்லாம் சிறிய வயதில் இருந்தே செய்கிறேன்... கர்ப்பத்தின் போதும் செய்கிறேன்' என்றால் பிரச்னை இல்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து செய்திருக்கவே மாட்டார்கள். யாரோ சொல்வதை நம்பி, கர்ப்பத்தின் போது இந்தப் பயிற்சிகளைச் செய்தால், இரு எலும்புகளும் ஒட்டியிருக்கும் இடுப்பு எலும்பின் முன் பகுதியில் அழற்சி ஏற்பட்டு வலி வந்து விடும்.

அதன்பின் எதுவும் செய்ய முடியாமல் முழுமையாக, 'பெட் ரெஸ்ட்'டில் இருக்க வேண்டியதாகி விடும். பிரசவம் ஆன பின் இடுப்பு பகுதியில் தொடர்ந்து வலி இருக்கும். குழந்தையை துாக்க சிரமமாக இருக்கும். தவறான பயிற்சியால் வந்த வலியை உடனே சரி செய்யாவிட்டால், நீண்ட நாட்கள் வலியுடன் இருக்க வேண்டியதாகி விடும்.

'யு டியூப்' பார்த்து சமையல் செய்யலாம்; ஆனால், உடற்பயிற்சி செய்வது தவறு. அவரவரின் உடல் தேவையை தெரிந்து, மருத்துவ ஆலோசனையுடன் பயிற்சி செய்வதே பாதுகாப்பானது.

கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாவதால், வயிற்றின் முன் பக்கமுள்ள, 'ரெக்டஸ்' தசைகள் விரியும்; குழந்தை பிறந்த பின், தானாகவே சேர்ந்து விடும். சிலருக்கு சேராமல் அப்படியே இருப்பதால், நடுவில் உள்ள இடைவெளியில், 'அம்பிலிக்கல் ஹெர்னியா' எனப்படும் குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

துணி, பெல்ட் கட்டுவது, இடுப்பு பகுதியில் விரிந்த எலும்புகளில் ஏற்படும் வலி குறைவதற்கு மட்டுமே. விரிந்த தசைகள் முழுமையாக சேர்ந்து விடும் என்று சொல்ல முடியாது. முறையான ஆலோசனையுடன் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே பழைய நிலைக்கு வரும். தவறாக செய்தால், விரிசல் இன்னும் அதிகமாகி, குடலிறக்கம் மேலும் அதிகமாகி விடலாம்.

இந்த விபரங்கள் தெரியாமல், குழந்தை பிறந்ததும் எடையை குறைக்க, தசைகள் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியாமல் ஓடுவது, 'ஜாகிங்' செய்வது, 'ஸ்கிப்பிங்' செய்வது என தவறு செய்கின்றனர்.

டாக்டர் ஜெ.ஜெயஸ்ரீ,

மகளிர் நல மருத்துவர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us