நாங்க இப்படிதானுங்க!: கம்பு ரொட்டி தரும் கச்சிதம்!
நாங்க இப்படிதானுங்க!: கம்பு ரொட்டி தரும் கச்சிதம்!
PUBLISHED ON : ஏப் 01, 2018

எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப, உடல் கட்டை கச்சிதமாக வைத்திருப்பவர், அமீர்கான். நடிகர் சூர்யாவின் மானசீக, 'பிட்னெஸ்' குரு.
பி.கே., டங்கல், துாம், 3 இடியட்ஸ் என, எந்த படத்தை பார்த்தாலும், நடிப்பிற்கு இணையாக பிரமிக்க வைத்தது அவரது, 'பிட்னஸ்!' முறையான ஒர்க் - அவுட், சமச்சீரான உணவு, போதுமான ஓய்வு மூன்றும் தான், இதன் ரகசியம்.
ஒர்க் - அவுட் ஆரம்பிப்பதற்கு முன், ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்பிடும் அமீர், ஒரு நாளைக்கு, மூன்று டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்.
சோளம், கம்பு மற்றும் கோதுமை மாவு கலந்த சப்பாத்தி, தந்துாரி சிக்கன், முட்டை வெள்ளைக் கரு, பழங்கள், காய்கறிகள் என சாப்பிடும் அமீர், ஸ்நாக்சிற்கு, பிஸ்கட், பிரவுன் பிரட், சான்ட்விச், பப்பாளி எடுத்துக் கொள்கிறார்.
மோர் தவிர, வேறு எந்த விதத்திலும் பால் பொருட்கள் சாப்பிடுவதில்லை.
- அமீர்கான், பாலிவுட் நடிகர்.

