குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! எடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! எடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்!
PUBLISHED ON : ஏப் 08, 2018

பேலியோ டயட்டில், 17 - 20 கிலோ வரை எடை குறைகிறது; எடை குறையும் போது, சர்க்கரை, ரத்தக் கொழுப்பு குறையும். வெறும் அசைவம் மட்டும் எடுத்து, கார்போ ஹைட்ரேட்டை முழுமையாக அல்லது பாதியாக குறைத்தால், 'கீடோன்' என்ற உப்பு உடலில் சேரும். அது, ஆபத்தை உண்டு பண்ணலாம் என்ற பயமும், கேள்வியும், நவீன அறிவியல் படித்த எல்லோருக்கும் இருக்கிறது.
'அசைவ உணவு சாப்பிட்டுப் பழக்கம் இருந்தால், முழுமையாக ஓரிரு மாதங்கள் அதை மட்டுமே சாப்பிட வேண்டும்' என சொன்னவர்கள், தற்போது, '20 சதவீதம் அசைவம், 20 சதவீதம் பயறு, கீரை, வைட்டமின் மாத்திரைகள், பி காம்ப்ளக்ஸ் சாப்பிடுங்கள்' என்கின்றனர்.
எடை, 100 கிலோ இருக்கிறது... வேறு வழியே இல்லை என்ற நிலையில், பேலியோ டயட் பயன்படுத்தி, எடையைக் குறைத்து, மீண்டும் சரிவிகித, சமச்சீரான உணவுப் பழக்கத்திற்கு வந்துவிட வேண்டும் என்பது தான் என் ஆலோசனை.
டாக்டர் கு.சிவராமன்
சித்தா சிறப்பு மருத்துவர், சென்னை
www.arogyahealthcare.com

