PUBLISHED ON : ஜூன் 25, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மேனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிற்கும் 45 - 55 வயதில், மத்திய உடல் பருமன், அதாவது வயிறு, இடுப்பைச் சுற்றியும் கொழுப்பு சேருவது 44 சதவீதம் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், இந்த வயதில், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைந்து, ஆண்ட்ரோஜென் ஹார்மோன் அளவு அதிகரிக்கிறது.
தசைகளை வலிமைப்படுத்தும் பயிற்சிகளை செய்யும் போது, இந்தப் பிரச்னையை சுலபமாக தவிர்க்கலாம். எனவே, இந்த வயதில் பெண்கள் வெயிட் லிப்ட் செய்வது நல்ல பலன் தரும். இதுவரையிலும் பளு துாக்கும் பயிற்சி செய்யாதவர்கள், பயிற்சியாளரின் மேற்பார்வையில், வாரத்தில் ஒரு நாள் பயிற்சியை துவக்கி, அதன் பின், வாரத்தில் மூன்று நாட்கள் செய்யலாம்.
- கைனகாலஜி இதழ்

