sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மதிக்கத் தெரிந்தால் ஆரோக்கியம் உண்டாகும்!

/

மதிக்கத் தெரிந்தால் ஆரோக்கியம் உண்டாகும்!

மதிக்கத் தெரிந்தால் ஆரோக்கியம் உண்டாகும்!

மதிக்கத் தெரிந்தால் ஆரோக்கியம் உண்டாகும்!


PUBLISHED ON : ஜூன் 18, 2023

Google News

PUBLISHED ON : ஜூன் 18, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளைஞர்களிடம் முதியவர்களுக்கு இருக்கும் அதிகமான எதிர்பார்ப்பும், இளைய தலைமுறையினரின் கல்வி, பொருளாதார வசதியுமே முதியோரை மதிக்காத நிலை உருவாக காரணம்.

எந்த வருமானமோ சொத்தோ இல்லாமல் இளைஞர்களை சார்ந்திருப்பவர்கள், ஒரே குழந்தையைப் பெற்றவர்கள், மறதி, பக்கவாதம், உதறுவாதம் போன்ற நாள்பட்ட நோயால் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், முதுமையில் அவதிப்படுகின்றனர்.

வெளியில் கூட்டுக் குடும்பம் என்று சொல்லிக் கொண்டு, வீட்டில் பெரியவர்களிடம் பேசாமல் மனதளவில் காயப்படுத்துவது, அடிக்கடி திட்டுவது, சண்டை போடுவது, காசோலையில் பொய் கையெழுத்திட்டு பணம் எடுப்பது, உயில் எழுதும்படி வற்புறுத்துவது, மது போதையில் முதியோரிடம் பணம் கேட்டு துன்புறுத்துவது, அடிப்பது என்பது இயல்பாக நடக்கிறது.

என்ன தான் தீர்வு?

* வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள முதியவ்ர்களுக்கு, சமூக நலத் துறை, தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக நேரடியாக உதவலாம். முதியவர்களை அவமதிப்பது, பொருளாதார வசதியுள்ள குடும்பங்களிலும் நடக்கவே செய்கிறது. இதைத் தவிர்க்க தாங்கள் நல்ல நிலையில் இருக்கும் போதே உயில் போன்றவற்றை எழுதி வைப்பது நல்லது. பொய் கையெழுத்திடும் நபர்களை அடையாளம் கண்டு, வங்கிக்கு தெரிவித்தால், அவர்கள் கவனமாக இருப்பர்.

* முதியேரை மதிக்கும் இளைஞர்களுக்கு பத்ம விருதுக்கு நிகரான தேசிய விருதை வழங்கலாம். பெரியவர்களை மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்த கட்டுரை களை பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யலாம்.

டாக்டர் வி.எஸ். நடராஜன்

முதியோர் நல சிறப்பு மருத்துவர்.

சென்னை044 26412030






      Dinamalar
      Follow us